உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரும் லெமன் கிராஸ் பற்றி தெரியுமா?


Shobana Vigneshwar
21-04-2023, 10:23 IST
www.herzindagi.com

லெமன் கிராஸ்

    இது நரம்பு மண்டலத்தை ஆதரிக்கும் ஒரு அற்புதம் மூலிகை. மன அழுத்தத்தை குறைப்பது முதல் உடல் எடையை குறைப்பது வரை லெனன் கிராஸ் தரும் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் படித்தறியலாம்.

Image Credit : freepik

எடை இழப்பு

    உடலில் உள்ள அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றவும், கொழுப்புகளை திறம்பட கரைக்கவும் லெமன் கிராஸ் உதவுகிறது. அடிவயிற்று கொழுப்பு மற்றும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் லெமன் கிராஸ் டீ குடிக்கலாம்.

Image Credit : freepik

எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

    நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே அதிகரிக்கும் குணங்கள் லெமன் கிராஸில் உள்ளன. இது வியர்வையை தூண்டுவதன் மூலம் காய்ச்சலினால் ஏற்படும் அதிக வெப்பநிலையை குறைக்க உதவுகிறது.

Image Credit : freepik

டைப் 2 சர்க்கரை நோய்

    உடலில் ஆரோக்கியமான இன்சுலின் அளவை பராமரிக்க லெமன் கிராஸ் உதவுகிறது. இருப்பினும் சர்க்கரை நோயிற்கு சிகிச்சை பெருபவர்கள் மருத்துவரை ஆலோசனை செய்த பின் லெமன் கிராஸை எடுத்துக் கொள்வது நல்லது.

Image Credit : freepik

நோய்த்தொற்றுகளை தடுக்கும்

    இதில் சக்திவாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இப்பண்புகள் நோய்க்கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.

Image Credit : freepik

சரும ஆரோக்கியம்

    லெமன் கிராஸ் அத்தியாவசிய எண்ணெயில் உள்ள ஆண்டிசெப்டிக், அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் இயற்கையான சுத்தப்படுத்தியாக செயல்படுகின்றன. இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சரும துளைகளில் உள்ள கிருமிகளை நீக்கவும் உதவுகிறது.

Image Credit : freepik

செரிமான மண்டலம்

    லெமன் கிராஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை ஈஸ்ட் மற்றும் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கின்றன. இதனால் குடல் மற்றும் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : freepik