வாழைப்பழத்தின் வகைகள் மற்றும் அதன் ஆச்சரியமூட்டும் நன்மைகள்!
Alagar Raj AP
06-09-2024, 18:00 IST
www.herzindagi.com
வாழைப்பழம்
இந்த உலகில் மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைப்பழ வகைகள் உள்ளது. அவற்றில் இந்தியாவில் அதிகம் காணப்படும் சில வாழைப்பழத்தின் நன்மைகளை இந்த பதிவில் அறிவோம்.
ரஸ்தாளி
அதிக சுவை கொண்ட வாழைப்பழம் ரஸ்தாளி பழத்தைக் கூறலாம். இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய் அபாயம் குறையும்.
கற்பூரவல்லி பழம்
கற்பூரவல்லி வாழைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானத்தை சீராக்கவும் மலச்சிக்கலை தடுக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
மொந்தம் பழம்
மொந்தம் வாழைப்பழத்தை சாப்பிடுவதால் உடல் வறட்சி நீங்கி குளிர்ச்சி கிடைக்கும். இதனால் அம்மை நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிட்டால் நோயின் தாக்கம் குறையும்.
எலச்சி பழம்
தென்னிந்தியாவில் எலைச்சி பழம் என்றும் வட இந்தியாவில் எலக்கி பழம் என்றும் அழைக்கப்படுகிறது. மாதவிடாய் காலங்களில் எலச்சி வாழைப்பழம் சாப்பிடுவதால் பிடிப்புகள் அசௌகரியம் குறையும். இவற்றில் உள்ள வைட்டமின் பி6 மாதவிடாய் காலங்களில் ஹார்மோனை சமநிலைப்படுத்தி மனநிலையை மேம்படுத்தும்.
பேயன் பழம்
தமிழ் நாட்டு வாழைப்பழ வகைகளில் ஒன்றான இந்த பேயன் பழம் குடல் புண் மற்றும் வயிற்று அசௌகரியத்தில் இருந்து நிவாரணம் தரும். மேலும் உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
மட்டி பழம்
இப்பழம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. மட்டி இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும் என்பதால் அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடலாம்.