கோடை காலத்திற்கு முன் செல்ல வேண்டிய சூப்பரான சுற்றுலா தலங்கள்
Alagar Raj AP
31-01-2024, 14:50 IST
www.herzindagi.com
மார்ச் மாதம் முதல் கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில் அதற்கு முன் குளிர் காலத்தில் சுற்றுலா செல்ல அருமையான குளிர் கால சுற்றுலா தலங்கள் குறித்து காண்போம்.
தர்மசாலா
ஹிமாச்சல் மாநிலம் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள காங்க்ரா மாவட்டத்தில் உள்ள தௌலாதர் மலைத்தொடரில் 1,457 அடி உயரத்தில் அமைந்திருக்கும் ஒரு சிறிய நகரம் தான் தர்மசாலா. குளிர் காலத்தில் இங்கு உள்ள பௌத்த மத தலங்களை பனிப்பொழிவுடன் ரசிக்கலாம்.
மூணாறு
புதுமண தம்பதியினரின் தேனிலவுக்கு பிரபலமான இடம் தான் கேரளாவில் அமைந்துள்ள மூணாறு. குளிர் காலத்தில் இங்கு வந்தால் மூடுபனியால் மூடப்பட்டிருக்கும் மலை சிகரங்களை குளிர்ந்த காற்றுடன் ரசிக்கலாம்.
ஜெய்சால்மர்
ராஜஸ்தான் தார் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள பாலைவன நகரம் தான் ஜெய்சால்மர். கோடையில் இங்கு கொளுத்தும் வெப்பம் காரணமாக சுற்றிப் பார்ப்பது கடினம். ஆனால் குளிர் காலத்தில் இங்கு வந்தால் இதமான சூழலில் பாலைவன முகாம், ஒட்டகச் சவாரி, குவாட் பைக்கிங், டூன் பேஷிங், பாராசைலிங் போன்ற பல சாகச விளையாட்டுகளில் ஈடுபடலாம்.
ஷில்லாங்
மேக கூட்டங்களுக்கு மத்தியில் மலை தொடைகளுக்கு நடுவே அமைந்திருக்கும் அழகிய நகரம் தான் மேகாலயா மாநிலத்தின் தலைநகர் தான் ஷில்லாங். குளிர் காலத்தில் இங்கு பயணிப்பதால் அழகான அருவிகள், ஏரிகள் மர்மமான குகைகள் போன்ற இயற்கை அதிசயங்களை காணலாம்.
சிம்லா
பனிப்பொழிவின் முழு அழகையும் ரசிக்க ஒரு அருமையான நகரம் தான் ஹிமாச்சல் மாநிலத்தின் தலைநகர் சிம்லா. சிம்லாவில் இருக்கும் உணவகங்களில் புதிய உணவை ருசித்து கொண்டே பனியில் மூடி இருக்கும் காடுகள் மற்றும் நகரத்தை ரசிப்பது புதிய அனுபவத்தை கொடுக்கும்.
குல்மார்க்
ஜம்மு காஷ்மீரில் அமைந்திருக்கும் ஒரு வசீகர நகரம் தான் குல்மார்க். குளிர் காலத்தில் இங்கு சென்றால் பனிச்சறுக்கு, பாராக்ளைடிங், ரோப் கார் போன்ற மலையேற்றம் போன்ற சாகசங்களில் ஈடுபடலாம்.