இந்தியர்கள் விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதி உள்ள நாடுகள்
Alagar Raj AP
06-11-2024, 15:14 IST
www.herzindagi.com
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் கிட்டத்தட்ட 63 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதி உள்ளது. அவற்றில் மலிவான விலையில் பயணிக்கக்கூடிய அழகான டாப் 10 நாடுகள் இதோ.
நேபாளம்
இமைய மலைகளின் நடுவே அமைந்துள்ள நேபாளம் அதன் இயற்கை அழகுக்காக அறியப்படுகிறது, இதில் பனி மூடிய மலைகள், பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளது.
பூட்டான்
புத்த பாரம்பரியத்தை சுமந்து இமயமலையில் கம்பிரமாக இருக்கும் பூட்டான் அதன் வியத்தகு நதி, பள்ளத்தாக்குகள் மற்றும் பளபளக்கும் நீரோடைகளுக்கு பெயர் பெற்றது.
மாலத்தீவுகள்
மாலத்தீவுகள் இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு வெப்பமண்டல சொர்க்கமாகும். இங்குள்ள பல குட்டி தீவுகள் வெள்ளை மணல் கடற்கரைகள், பவளப்பாறைகளை தன்னுள் வைத்துள்ளது.
இலங்கை
பல்வேறு இயற்கை அதிசயங்கள், வளமான கலாச்சாரம் என பல சிறப்புகளை கொண்டுள்ள இலங்கையில் 60 நாட்கள் விசா இல்லாமல் இந்தியர்கள் பயணிக்கலாம். அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய இந்த அனுமதி அடுத்த ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும்.
கென்யா
கென்யா அதன் வனவிலங்குகள், இயற்கை காட்சிகள் மற்றும் வெப்பமண்டல கடற்கரைகள் உட்பட அதன் இயற்கை அழகுக்காக அறியப்படுகிறது. இந்த நாட்டில் இந்தியர்கள் 90 நாட்கள் விசா இல்லாமல் பயணிக்கலாம்.
தாய்லாந்து
கண்கவர் நகரங்களும் அதன் துடிப்பான மக்களும், தனித்துவமான மரபுகள் மற்றும் வித்தியாசமான உள்ளூர் உணவுகள் என பல சுவாரசியங்கள் உள்ள தாய்லாந்து நாட்டில் 60 நாட்கள் விசா இல்லாமல் பயணிக்கலாம்.
மொரிஷியஸ்
அமைதியான கடற்கரைகள், வசீகரிக்கும் நிலப்பரப்பு என இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள இந்த தீவு தேசத்திற்கு விசா இல்லாமல் இந்தியர்கள் 90 நாட்கள் பயணிக்கலாம்.
சீஷெல்ஸ்
இந்திய பெருங்கடலில் 115 அழகிய குட்டி தீவுகளை உள்ளடக்கிய சீஷெல்ஸ் என்ற நாட்டில் இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாட்கள் பயணிக்கலாம்.
எல் சால்வடார்
கடற்கரைகள், எரிமலைகள், காடுகள் மற்றும் பழங்கால தொல்லியல் தளங்கள் என இயற்கையும், வரலாறும் பின்னி பிணைந்துள்ள எல் சால்வடார் நாட்டில் விசா இல்லாமல் 180 நாட்களுக்கு பயணிக்கலாம்.
பார்படாஸ்
கரீபியன் தீவுகளில் ஒன்றாக உள்ள பார்படாஸ் அதன் வசீகரிக்கும் கலாச்சாரம், அன்பான விருந்தோம்பல், பல்வேறு உணவு வகைகள், ஆச்சரியமூட்டும் இயற்கை வளங்கள் என பார்படாஸின் ஒவ்வொரு பகுதியும் உங்களை கவர்ந்திழுக்கும்.