கோவா போறதுக்கு பிளான் போடுவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க!


Alagar Raj AP
15-02-2024, 12:42 IST
www.herzindagi.com

    நண்பர்களுடன் அல்லது உங்கள் காதல் துணையுடன் கோவா செல்வதற்கு முன் இந்த விஷயங்களை தெரிந்து கொண்டு கோவா போறதுக்கு பிளான் போடுங்க.

கோவா சீசன்

    கோவாவில் ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் தென்மேற்கு பருவமழைக் காலம் என்பதால் இந்த மாதங்களில் கோவா சென்றால் பயணம் பாதிப்படையும். ஆகையால் அக்டோபர் முதல் மார்ச் வரை இனிமையான வானிலை நிலவும் என்பதால் கோவா செல்வதற்கு இந்த மாதங்கள் நல்ல தேர்வாக இருக்கும்.

பார்க்க வேண்டிய இடங்கள்

    கோவாவின் கலங்குட் முதல் அகோண்டா வரை உள்ள சுமார் 81 கி.மீ. நீளமுள்ள கடற்கரையில் கோவாவின் ஒவ்வொரு அழகையும் காணலாம். பாராசைலிங், ஜெட் ஸ்கீயிங், சர்ஃபிங்கில் போன்ற கடல் சாகச விளையாட்டுகளில் ஈடுபடலாம்.

தங்க மலிவான இடங்கள்

    ஆடம்பரமான கடற்கரை வில்லாக்களில் தங்க வேண்டுமென்றால் கோவாவின் தெற்கு பகுதிகளுக்கு செல்வது நல்ல தேர்வாக இருக்கும்.

தங்க ஆடம்பரமான இடங்கள்

    ஆடம்பரமான கடற்கரை வில்லாக்களில் தங்க வேண்டுமென்றால் கோவாவின் தெற்கு பகுதிகளுக்கு செல்வது நல்ல தேர்வாக இருக்கும்.

இரவு வாழ்க்கையை அனுபவிக்க…

    பப், பார்ட்டி, ஆடல் பாடல் என தலைநகர் பனாஜி குதூகலமான இரவு வாழ்க்கையை உங்களுக்கு வழங்கும்.

உணவுகள்

    கோவாவில் கடல் உணவுகள், தேங்காய் மற்றும் மசாலைகளால் செய்யப்படும் கோவன் கறி, பெபின்கா எனப்படும் இனிப்பு, ஃபெனி உள்ளூர் முந்திரியால் தயாரிக்கப்படும் மதுபானங்கள் போன்ற கோவாவின் பாரம்பரிய உணவுகளை சுவைக்கலாம்.