காட்டுகள் கண்ணகி கோவில்: வருடத்திற்கு ஒரு நாள் மட்டுமே அனுமதி.. எங்கிருக்கு தெரியுமா?


Alagar Raj AP
07-04-2024, 16:00 IST
www.herzindagi.com

எங்கு உள்ளது?

    தமிழகத்தின் தேனி மாவட்டம் லோயர் கேம் பகுதியில் இருந்து 14 கி.மீ தொலைவிலும், கேரளாவின் குமுளியில் இருந்து 10 கி.மீ தொலைவிலும் கேரளாவில் அமைந்துள்ளது இந்த ஸ்ரீ மங்கள தேவி கண்ணகி கோவில்.

கோவிலின் வரலாறு

    கோவலன் கொலை செய்யப்பட்ட தூக்கத்தில் மதுரையை எரித்த கண்ணகி வைகை கரையோரமாகவே இந்த இடத்திற்கு வந்ததாக சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை சிறப்பிக்கும் விதமாக சேர மன்னர் சேரன் செங்குட்டுவன் இமைய மலையில் இருந்து கல் எடுத்து வந்து கண்ணகிக்கு இந்த இடத்தில் கோயில் காட்டியுள்ளார்.

எப்போது அனுமதி?

    ஆண்டுதோறும் நிகழும் சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் பூமாரி திருவிழாவின் போது மட்டுமே இங்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

கேரள அரசின் கட்டுப்பாட்டில்

    தற்போது இந்த கோவில் இந்திய தொல்லியல் துறை மற்றும் கேரள வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாடு அரசு இந்த கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இணைக்க முயன்றும் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

எப்படி செல்வது?

    கடல் மட்டத்தில் இருந்து 1337 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு குமுளியில் இருந்து பாதி தூரம் ஜீப் இயக்கப்படும். மீதம் உள்ள தூரத்தை நடந்து கடக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் பொது வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

அனுமதி நேரம்

    சித்ரா பௌர்ணமியின் போது காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

    இந்த இணைய கதையை கண்ணகி கோவிலுக்கு செல்ல திட்டமிடுபவர்களுக்கு பகிரவும். மேலும் இது போன்ற தகவல்களுக்கு ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைந்திருங்கள்.