குடியரசு தின விடுமுறையில் தென் இந்திய மாநிலங்களுக்கு இன்பச் சுற்றுலா
Raja Balaji
20-01-2024, 12:11 IST
www.herzindagi.com
குடியரசு தினத்தையொட்டி மூன்று நாட்களுக்கு கிடைக்கும் விடுமுறையை பயன்படுத்தி நீங்கள் தென் இந்தியாவில் புத்துணர்ச்சியூட்டும் மலைகள், அழகிய கடற்கரைகளை சுற்றிப் பார்க்கலாம்
ஹம்பி, கர்நாடகா
இது யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சுற்றுலாத் தலமாகும். இந்த நகரம் முழுவதும் உள்ள கோயில்கள் விஜயநகர ராஜ்ஜியத்தில் கட்டப்பட்டது
வயநாடு, கேரளா
கடவுளின் தேசமான கேரளாவில் இயற்கையை ரசித்திட அற்புதமான ஊர் என்றால் அது வயநாடு தான். இங்கு அடர்ந்த காடுகளும், தேயிலை தோட்டங்களும் அதிகளவில் உள்ளன
அந்தமான் நிகோபார் தீவு
இங்குள்ள கடற்கரைகளை பற்றி விவரிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு முறை சுற்றுலாவுக்கு செல்லுங்கள். மீண்டும் அங்கு செல்ல வேண்டும் என நினைப்பீர்கள்
ஊட்டி, தமிழ்நாடு
தமிழகத்தில் உள்ள இந்த மலைவாசஸ்தலம் எண்ணற்ற அழகிய காட்சிகளை கண்களுக்கு விருந்தாக படைக்கும்
பாண்டிச்சேரி
பாண்டிச்சேரியில் உள்ள வண்ணமயமான வீடுகள் மற்றும் தேவாலயங்கள் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் போது கட்டப்பட்டது. உங்கள் விடுமுறையை அனுபவிக்க இது மிகவும் சரியான இடமாகும்
இந்த கதை உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்