இந்திய ஓட்டுநர் உரிமம் போதும்..! இந்தியர்கள் இந்த நாடுகளில் வாகனம் ஓட்டலாம்


Alagar Raj AP
03-03-2024, 17:00 IST
www.herzindagi.com

அமெரிக்கா

    நீங்கள் அமெரிக்கா சென்ற முதல் நாளில் இருந்து ஒரு வருடத்திற்கு இந்திய ஓட்டுநர் உரிமம் செல்லுபடியாகும். அனால் ஓட்டுநர் உரிமம் ஆங்கிலத்தில் இருப்பது அவசியம்.

கனடா

    கனடாவில் இந்தியர்கள் நுழைந்த முதல் நாளில் இருந்து 60 நாட்கள் வரை நாட்கள் வரை இந்திய உரிமத்துடன் வாகனம் ஓட்டலாம்.

நியூசிலாந்து

    நியூசிலாந்துக்குள் நுழைந்த முதல் நாளில் இருந்து ஒரு வருடத்திற்கு இந்திய ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தலாம். அதைத் தாண்டினால் நியூசிலாந்து சர்வதேச ஓட்டுநர் உரிமம் அல்லது நியூசிலாந்து ஓட்டுநர் உரிமம் கட்டாயம் தேவை.

தென்னாப்பிரிக்கா

    இந்திய ஓட்டுநர் உரிமம் தென்னாப்பிரிக்காவில் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.

ஜெர்மனி

    ஜெர்மனியில் நீங்கள் இந்திய ஓட்டுநர் உரிமத்தை ஆறு மாதங்களுக்கு பயன்படுத்தலாம். ஆனால் ஓட்டுநர் உரிமம் ஆங்கிலம் அல்லது ஜெர்மன் மொழியில் இருக்க வேண்டும்.

ஆஸ்திரேலியா

    ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய தலைநகர் பிரதேசங்களில் மட்டும் இந்திய ஓட்டுநர் உரிமம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும். ஆஸ்திரேலியாவின் பிற பகுதிகளில் மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும்.

யுனைடெட் கிங்டம்

    இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து உள்ளிட்ட யுனைடெட் கிங்டம் பிராந்தியத்தில் இந்திய ஓட்டுநர் உரிமம் ஒரு வருடம் செல்லுபடியாகும். ஆனால் சில குறிப்பிட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும்.

சுவிட்சர்லாந்து

    இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர் ஒரு வருடத்திற்கு சுவிட்சர்லாந்தில் வாகனம் ஓட்டலாம். மற்ற நாடுகளை போல் அல்லாமல் இங்கு எந்த வாகனத்தையும் ஒருவர் வாடகைக்கு எடுத்து ஓட்டலாம்.

ஸ்வீடன்

    ஒரு வருடத்திற்கு இந்திய ஓட்டுநர் உரிமத்துடன் ஸ்வீடன் சாலைகளில் வாகனம் ஓட்டலாம். ஆனால் ஓட்டுநர் உரிமம் ஆங்கிலம் அல்லது ஸ்வீடன், ஜெர்மன், பிரஞ்சு, டேனிஷ் மற்றும் நார்வேஜியன் உள்ளிட்ட ஸ்வீடனால் அங்கீகரிக்கப்பட்ட மொழியில் மட்டும் இருக்க வேண்டும்.

பிற நாடுகள்

    அரபு நாடுகள், பின்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, பூடான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தலாம்.