வார இறுதியில் டூர் ப்ளான் இருக்கா? குறைந்த பட்ஜெட்டில் தேனியில் உள்ள இந்த இடங்களை விசிட் பண்ணுங்க


Jansi Malashree V
18-01-2025, 07:56 IST
www.herzindagi.com

    தேனி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்கள் சுற்றுலா தலங்கள் என்றாலும், குறைந்த பட்ஜெட்டுடன் வாரத்தின் இறுதியில் பயணித்த ஏற்ற இடங்களின் லிஸ்ட்

மேகமலை:

    தேயிலைத் தோட்டங்கள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் கண்களுக்குப் பிரமிப்பை ஏற்படுத்தும் மலை காட்சிகளுக்கு பெயர் பெற்ற இடம் தான் மேகமலை. காலையில் சென்று மாலையில் வீடு திரும்ப ஏற்ற சுற்றுலாதலம். பனி மூட்டத்திற்கு இடையே பயணிப்பது புது அனுபவத்தைத் தரக்கூடும்.

வைகை அணை:

    வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை அழகிய சூழலைக் கொண்டுள்ளது. மனதை அமைதியாக்குவதோடு, குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற இடமாகவும் அமைகிறது வைகை அணை.

கும்பக்கரை நீர்வீழ்ச்சி:

    பசுமையான சூழலுக்கு இடையே மலையேற்றம், சுத்தமான காற்று என சுற்றுலா பயணிகளுக்கு விருந்தாக அமைகிறது கும்பக்கரை நீர்வீழ்ச்சி. எத்தனை குளிர் இருந்தாலும் மலையிலிருந்து வரக்கூடிய மூலிகை தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது.

குரங்கணி மலைகள்:

    டிரக்கிங் அதாவது மலையேற்றத்தை விரும்பும் ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது குரங்கணி மலைகள். பனிகளுக்கு இடையே பயணிப்பது, விண்ணை முட்டும் மலைகளோடு குளிர்ந்த வானிலையை அனுபவிக்க ஏற்ற இடம்.

    வார இறுதியில் இயற்கையோடு பயணிப்பது முதல் சாகசம், ரிலாக்ஸ் எடுப்பதற்கு ஏற்ற இடமாக உள்ளது தேனி மாவட்டம்.