சென்னையில் குறைந்த விலையில் நிறைந்த ஷாப்பிங் செய்ய சிறந்த இடங்கள்


Alagar Raj AP
01-03-2024, 14:58 IST
www.herzindagi.com

தி.நகர்

    தியாகராய நகர் எனப்படும் தி.நகர் சென்னையின் முக்கிய கடைவீதிகளில் ஒன்று. இங்கு ஆடைகள், நகைகள், பாத்திரங்களை தள்ளுபடி விலையில் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து வாங்கலாம்.

பாண்டி பஜார்

    பாண்டி பஜார் சென்னையின் முக்கிய வணிக பகுதியாகும். இங்கு நீங்கள் மின்னணு சாதனங்கள், ஆடை அணிகலன்கள், காலணிகள், வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தையும் மலிவு விலையில் வாங்கலாம்.

ரிச்சி தெரு

    இந்தியாவின் 2வது மிகப்பெரிய மின்னணு சந்தை இதுவே. இங்குள்ள 2000க்கும் மேற்பட்ட கடைகளில் டிவி, கம்ப்யூட்டர்கள், மொபைல், லேப்டாப், சிசிடிவி கேமராக்கள் என இங்கு இல்லாத மின்னணு சாதனைகளே கிடையாது என்று சொல்லலாம். உங்களுக்கு தேவையான அனைத்து மின்னணு உதிரிபாகங்களும் இங்கு கிடைக்கும்.

பனகல் பூங்கா

    பனகல் பூங்கா புடவை கடைகள் மற்றும் நகைக் கடைகளுக்கு பெயர் பெற்றது. பனகல் பூங்காவைச் சுற்றியுள்ள ரங்கநாதன் தெரு, தெற்கு உஸ்மான் சாலை போன்ற தெருக்களில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு நீங்கள் பெண்களுக்கு தேவையான அனைத்து ஆடை அணிகலன்களையும் இங்கு வாங்கலாம்.

சவுகார்பேட்டை

    வட இந்தியர்கள் அதிகம் கடை நடத்தும் இந்த பகுதியில் லெஹெங்காக்கள் முதல் சோளிகள் வரை அனைத்து வகையான வட இந்தியா ஆடைகளையும் குறைந்த விலையில் வாங்கலாம்.

பாரிமுனை

    வீட்டு உபயோக பொருட்களை தேடுபவர்களுக்கு இது சிறந்த இடமாக இருக்கும். இங்கு கைவினைப் பொருட்கள், மரச்சாமான்கள், இரும்பு பொருட்கள் என வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இங்கு கிடைக்கும்.

மூர் மார்க்கெட்

    சென்னை பார்க் டவுனில் அமைந்துள்ள மூர் மார்க்கெட் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து வகையான புத்தகங்களையும் காணலாம். மற்றும் உபயோகித்த புத்தகங்கள், இரும்பு மற்றும் மின்னணு பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம்.