காணும் பொங்கலை கொண்டாட தமிழகத்தின் சூப்பரான கடற்கரைகள்


Alagar Raj AP
13-01-2025, 19:40 IST
www.herzindagi.com

காணும் பொங்கல் சுற்றுலா

    பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக காணும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு செல்வது வழக்கம். அப்படி காணும் பொங்கலை கொண்டாட தமிழகத்தின் சூப்பரான கடற்கரை ஸ்பாட்ஸ் இதோ.

மகாபலிபுரம் கடற்கரை

    இயற்கையையும் தொன்மையான கட்டிடக்கலையும் ரசிக்க மகாபலிபுரம் கடற்கரை சிறந்த இடமாக இருக்கும்.

கன்னியாகுமரி கடற்கரை

    இந்தியாவின் தெற்கு முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை கண்டு ரசிக்கலாம்.

சில்வர் பீச்

    அமைதியான சூழலில் கடல் அலைகளை ரசிக்க கடலூரில் உள்ள சில்வர் பீச்சுக்கு செல்லுங்கள்.

கோவளம் கடற்கரை

    சென்னையில் இருந்து 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கோவளம் கடற்கரை நண்பர்களுடன் குதூகலமான கொண்டாட்டத்திற்கு ஏற்றது.

மணப்பாடு கடற்கரை

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே உள்ளது மணப்பாடு கடற்கரை. இங்கு மணலும் கல்லும் சேர்ந்து சுமார் 50 அடி உயரத்தில் உள்ள மணல் குன்று உங்களை கவரும்.

மனோரா கடற்கரை

    இயற்கையின் அமைதியை அனுபவிக்க விரும்புவோர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மனோரா கடற்கரைக்கு செல்லலாம். இங்குள்ள மனோரா கோட்டை இந்த கடற்கரையின் அடையாளமாக உள்ளது.

மெரினா பீச்

    குடும்பத்துடன் கலகலப்பாக என்ஜாய் பண்ண சென்னையின் அடையாளமான மெரினா பீச்சுக்கு சென்று வாருங்கள்.