கண்ணாடி போல் நகங்கள் பளபளக்க இதை பயன்படுத்துங்க


Alagar Raj AP
13-03-2025, 14:34 IST
www.herzindagi.com

நகங்கள்

    நமது உடல் அழகை மேம்படுத்துவதில் நகங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால் தான் பல பெண்கள் நகங்களை நீளமாக வளர்த்து அவற்றில் பல்வேறு வண்ணங்களில் வண்ணம் தீட்டுகிறார்கள்.

பளபளப்பான நகங்கள்

    இருப்பினும் சிலருக்கு அவர்களின் நகங்கள் நிறமிழந்து மந்தமாக காட்ச்சியளிக்கும். அது போன்று உங்களுக்கு இருந்தால் உங்கள் நகங்களை கண்ணாடி போல் எப்படி பளபளக்க செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

எலுமிச்சை சாறு

    நகங்களை பளபளப்பாக மாற்ற எலுமிச்சை சாற்றை பயன்படுத்தலாம். எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடாவை கலந்து நகங்களில் மசாஜ் செய்யவும். இது நகங்களை வலுவாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.

வெள்ளரிக்காய்

    உங்கள் நகங்களை அழகாக மற்றும் அற்புதமாக பொருட்களில் ஒன்று வெள்ளரிக்காய். ஒரு வெள்ளரிக்காய் துண்டை உங்கள் நகங்களில் தேய்க்கலாம் அல்லது வெள்ளரிக்காய் சாற்றை நகங்களில் தடவலாம்.

கடலை மாவு

    கடலை மாவை கொண்டு உங்கள் நகங்களை பிரகாசமாக்கலாம். இதற்கு கடலை மாவில் எலுமிச்சை சாற்றை கலந்து உங்கள் நகங்களில் தடவுங்கள்.

ரோஸ் வாட்டர்

    தினமும் ரோஸ் வாட்டரை நகங்களில் தடவினால், சில நாட்களில் வித்யாசத்தை காண்பீர்கள். ரோஸ் வாட்டர் இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுவதால் நகங்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும்.

முட்டையின் வெள்ளைக்கரு

    ஊட்டமளிக்கும் பண்புகளைக் கொண்டுள்ள முட்டையின் வெள்ளைக்கரு நகங்களை பளபளப்பாக வைத்திருக்க உதவும். முட்டையின் வெள்ளைக்கருவை நகங்களில் தடவுவதால் நகங்களை வலுவாகவும் பளபளப்பாகவும் மாறும்.

ஆரஞ்சு ஜூஸ்

    ஆரோக்கியமான மற்றும் பிரகாசமான நகங்களுக்கு ஆரஞ்சு ஜூஸ் உதவும். மேலும் இதில் உள்ள வைட்டமின் சி நக வளர்ச்சியை அதிகரிக்கும். இதற்கு ஆரஞ்சு ஜூஸை நகங்களில் தடவி மசாஜ் செய்து, சுத்தமான தண்ணீரில் கழுவவும்.