ஸ்ட்ரெட்ச் மார்க் மறைய கற்றாழையை இந்த வழிகளில் பயன்படுத்துங்க


Alagar Raj AP
23-12-2024, 14:58 IST
www.herzindagi.com

ஸ்ட்ரெட்ச் மார்க் உண்டாக காரணம்

    உடல் வளர்ச்சியடையும் போது அல்லது உடல் எடை அதிகரிக்கும் போது, பருவமடையும் போது, கர்ப்பம் போன்ற காரணங்கள் உடலில் ஸ்ட்ரெட்ச் மார்க் உண்டாகிறது.

    ஸ்ட்ரெட்ச் மார்க் பிரச்சனையில் இருந்து விடுபட கற்றாழையை எப்படி பயன்படுத்தலாம் என்பதை அறிக…

கற்றாழையின் நன்மை

    கற்றாழை தோலை பழுதுபார்க்கும் பண்புகளை கொண்டுள்ளது. இது ஸ்ட்ரெட்ச் மார்க்கை மறைய செய்கிறது. மேலும் கற்றாழையில் உள்ள குளுக்கோமன்னன் என்ற கலவை உடலில் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தி ஸ்ட்ரெட்ச் மார்க் மறைய உதவுகிறது.

கற்றாழை மற்றும் எலுமிச்சை சாறு

    கற்றாழை ஜெல்லில் எலுமிச்சை சாற்றை கலந்து தடவினால் ஸ்ட்ரெட்ச் மார்க் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.

கற்றாழை மற்றும் தயிர்

    ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல்லில் ஒரு தேக்கரண்டி தயிரை கலந்து ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் 15 தேய்க்கவும். இப்படி வாரத்திற்கு இரு முறை செய்து வர ஸ்ட்ரெட்ச் மார்க் மறையும்.

கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய்

    அலோ வேரா மற்றும் தேங்காய் எண்ணெயை கலந்து இரவு தூங்கும் முன் ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து அப்படியே விட்டுவிடுங்கள். இப்படி செய்தால் ஸ்ட்ரெச் மார்க் படிப்படியாக நீங்கும்.

கற்றாழை மற்றும் ஆலிவ் எண்ணெய்

    அலோ வேரா மற்றும் ஆலிவ் எண்ணெயை சமனான அளவு கலந்து ஸ்ட்ரெட்ச் மார்க்கில் தடவுங்கள். ஆலிவ் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஸ்ட்ரெட்ச் மார்க்கை குணப்படுத்தும்.

கற்றாழை ஜெல்

    வெறும் கற்றாழை ஜெல்லை மட்டும் ஸ்ட்ரெட்ச் மார்க்கை போக்க பயன்படுத்தலாம். அதற்கு கற்றாழை ஜெல்லை தோலில் தடவி மசாஜ் செய்து 20-40 நிமிடங்கள் அப்படியே வைத்து, அதன் பின் தண்ணீரில் கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வர ஸ்ட்ரெட்ச் மார்க் படிப்படியாக மறையும்.