இதை செய்தால் போதும் நெயில் பாலிஷ் புல்லட் வேகத்தில் உலர்ந்துவிடும்


Alagar Raj AP
20-08-2024, 12:51 IST
www.herzindagi.com

    பொதுவாக நகங்களில் போடும் நெயில் பாலிஷ் முழுவதும் உலர்வதற்கு 1-2 மணி நேரம் ஆகும். இது காய்ந்து போகும் வரை காத்திருப்பது சிலருக்கு கடுப்பான விஷயமாக இருக்கும். அப்படியான நபராக நீங்கள் இருந்தால் நாங்கள் சொல்லும் இந்த குறிப்புகளை பின்பற்றினால் சில நிமிடங்களில் நெயில் பாலிஷ் உலர்ந்துவிடும்.

ஐஸ் கட்டிகள்

    ஒரு கிண்ணத்தில் ஐஸ் கட்டிகள் மற்றும் ஐஸ் தண்ணீரை நிரப்பி, அதில் உங்கள் விரல்களை 5 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். இப்படி செய்தால் நெயில் பாலிஷ் சில நிமிடங்களில் உலர்ந்திருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள்.

ஹேர் ட்ரையர்

    நெயில் பாலிஷ் போட்ட விரல்களை ஹேர் ட்ரையர் மூலம் உலர வைக்கலாம். ஹேர் ட்ரையரை குளிர்ச்சியான காற்றில் வைத்து விரல்களில் காட்டினால் நெயில் பாலிஷை விரைவாக உலர்த்திவிடும்.

நெயில் பாலிஷ் டாப் கோட்

    நெயில் பாலிஷ் டாப் கோட்டை விரல்களில் பூசப்பட்ட நெயில் பாலிஷ் மீது பூசினால் நைல் பாலிஷ் எந்த விதத்திலும் பாதிக்காமல் விரைவில் காய்ந்து விடும்.

மெல்லிய பூச்சு நெயில் பாலிஷ்

    மெல்லிய பூச்சு கொண்ட நெயில் பாலிஷ் விரைவில் உலர்ந்துவிடும். தடிமனான பூச்சுகள் கொண்ட நெயில் பாலிஷ் உலர அதிக நேரம் எடுக்கும்.

அடுக்குகள்

    ஒரு நெயில் பாலிஷை பயன்படுத்திய பிறகு அடுத்த லேயர் பாலிஷைப் பயன்படுத்துவதற்கு முன் குறைந்தது 2-5 நிமிடங்கள் வரை காத்திருங்கள். இதனால் இரண்டு லேயருக்கும் இடையே குளிர்ந்த காற்று படர்ந்து விரைவில் உலரும்.

ஹேர் ஸ்ப்ரே

    நெயில் பாலிஷ் மேல் சில துளிகள் ஹேர் ஸ்ப்ரே அடிப்பதால் நெயில் பாலிஷ் சீக்கிரம் உலரும். ஹேர் ஸ்ப்ரேவின் திரவம் குளிர்ச்சியை உண்டாக்கி நெயில் பாலிஷை உலர செய்யும். அதிகமாக ஸ்ப்ரேன் செய்வது நெயில் பாலிஷை பாதிக்கலாம்.