முடி கருப்பாக செம்பருத்தி எண்ணெய் இப்படி பயன்படுத்துங்கள்
Sreeja Kumar
22-09-2023, 09:51 IST
www.herzindagi.com
செம்பருத்தி எண்ணெய்
முடி அடர்த்தியாக, கருப்பாக, நீளமாக வளர பெஸ்ட் எண்ணெய்யாக செயல்படுகிறது செம்பருத்தி எண்ணெய். அதை எப்படி தலைமுடிக்கு பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
Image Credit : google
கறிவேப்பிலை
செம்பருத்தி எண்ணெய்யில் கறிவேப்பிலை சேர்த்து 5 நாட்களுக்கு ஊற விடவும். பின்பு அந்த எண்ணெய்யை லேசாக சூடுப்படுத்தி குளிப்பதற்கு முன்பு தலையில் தடவி மசாஜ் செய்யவும்.
Image Credit : google
வெந்தயம்
செம்பருத்தி எண்ணெய்யில் சிறிதளவு வெந்தயம் சேர்த்து, அந்த எண்ணெய்யை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி 7 நாட்கள் அப்படியே வைக்கவும். பின்பு அந்த எண்ணெய்யை தலையில் ஸ்ப்ரே செய்து தலைமுடி முழுவதும் தடவவும்.
Image Credit : google
வெட்டிவேர்
முடிக்கு பல நன்மைகளை வழங்கும் வெட்டி வேரை செம்பருத்தி எண்ணெய்யில் போட்டு சூடுப்படுத்தவும். அந்த எண்ணெய்யை தலையில் தடவி 1 மணி நேரம் ஊற விட்டு, பின்பு ஹேர் வாஷ் செய்யவும்.
Image Credit : google
தேங்காய் எண்ணெய்
செம்பருத்தி எண்ணெய்யுடன் சமமான அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்து, தினமும் தலையில் தடவி வந்தால் நல்ல ரிசலட் கிடைக்கும்
Image Credit : google
மிக்ஸ்
செம்பருத்தி எண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் சிறிதளவு கற்றாழை ஜெல் சேர்த்து மிக்ஸ் செய்து, முடியில் தடவி மசாஜ் கொடுக்கவும். முடி கருகருவென வளரும்.