40 வயசுல இருக்கும் நீங்க 20 வயசு பொண்ணு போல மாற தினமும் இதை பண்ணுங்க!
Alagar Raj AP
14-05-2024, 12:45 IST
www.herzindagi.com
40 வயது என்பது முதுமைக்கும் இளமைக்கும் நடுபட்ட பகுதி. இந்த வயதில் உங்கள் சருமத்தை பராமரிக்கும் முயற்ச்சியில் இறங்குவது உங்கள் வயதை குறைத்து காட்டும். எனவே இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள சரும பராமரிப்பு குறிப்புகளை தினசரி பின்பற்றுவதன் மூலம் முதுமை அடைவதை குறைத்து இளமையை அதிகரிக்கலாம்.
ஹைட்ரேடிங் மாஸ்க்
வாரந்தோறும் ஹைட்ரேட்டிங் மாஸ்க்கை முகத்தில் பயன்படுத்துங்கள். இதனால் வறண்ட சருமத்தில் நீர் ஆழமாக ஊடுருவி, சருமத்தை மென்மையாக்குகிறது. இது முகத்தில் வயதான தோற்றத்தை அளிக்கும் சுருக்கங்களை குறைக்கும்.
சீரம்
உங்கள் வழக்கமான சரும பராமரிப்பிற்கு ரெட்டினால் சீரம் மற்றும் பெப்டைட் சீரமை சேர்த்து கொள்ளுங்கள். இவை சருமத்திற்கு கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் இறந்த சரும செல்கள் நீக்கப்பட்டு, சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
குவா ஷா
குவா ஷாவை பயன்படுத்தி தினமும் உங்கள் சருமத்தில் மசாஜ் செய்யத் தொடங்குங்கள். இது ஒரு பாரம்பரிய சீன நுட்பம், இதை செய்வதால் சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும், ஆக்ஸிஜன் ஓட்டம் அதிகரிக்கும். இதனால் இரத்தத்தில் இருந்து நச்சுகள் அகன்று தோல் முழுவதும் ஊட்டச்சத்துடன் இருக்கும்.
சுன்ஸ்கிரீன்
சுன்ஸ்கிரீனை பகலில் தினமும் 3-4 மணி நேரத்திற்கு ஒரு முறை பயன்படுத்துங்கள். இவை உங்கள் சருமத்தை சூரிய ஒளி, தோல் புற்றுநோய் மற்றும் முன்கூட்டிய வயதான தோற்றத்தில் இருந்து தடுக்க உதவுகிறது.
வாழ்க்கை முறை
சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் முக்கியமானதாக இருக்கிறது. நிறைய தூக்கம், சீரான உணவு, தவறாமல் உடற்பயிற்சி செய்வதன் மூலம் இந்த ஹார்மோன்கள் சரியாக வேலை செய்யும்.
மருத்துவரின் ஆலோசனை
குறிப்பிட்ட சரும பிரச்சனைகள் மற்றும் சரும பராமரிப்பிற்கு தோல் மருத்துவரின் ஆலோசனையை பெற்று பின்பற்றுவது சிறந்தது.