அக்குள் வியர்வை குறைய இந்த 7 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!


Alagar Raj AP
14-03-2024, 13:45 IST
www.herzindagi.com

குளித்த பின் செய்ய வேண்டியவை

    குளித்த பின் குறிப்பாக சூடான நீரில் குளித்த பின் ஆடை அணிவதற்கு முன் உடலை முழுமையாக உலர வைப்பதன் மூலம் அக்குள் வியர்வை வராமல் தடுக்கலாம்.

ஷேவ் செய்யவும்

    அக்குள் முடி அதிகம் இருப்பவர்கள் அல்லது அதிக அக்குள் துர்நாற்றம் இருந்தால் அக்குள் முடியை ஷேவிங் செய்வதன் மூலம் அக்குள் வியர்வையை குறைக்க முடியும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

    உங்களுக்கு ஹைப்பர்ஹைட்ரோசிஸ் பாதிப்பு இருந்தால் பூண்டு, வெங்காயம், கொழுப்பு நிறைந்த உணவுகள், சூடான, காரமான உணவுகள் ஆகியவற்றை சாப்பிடுவதை தவிர்த்தால் வியர்வை குறையும்.

சாப்பிட வேண்டிய உணவுகள்

    அக்குள் வியர்வையை குறைக்க உங்கள் தினசரி உணவில் திராட்சை, பாகற்காய், ப்ரோக்கோலி, கீரை, காலிஃபிளவர், இனிப்பு உருளைக்கிழங்கு, ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இறுக்கமான ஆடைகளை தவிர்க்கவும்

    அக்குளை இறுக்கும் ஆடைகளை அணிவதால் அக்குள் வியர்வை அதிகரிக்கும். ஆகையால் தளர்வான, காற்றோட்டமான ஆடைகளை அணிவதால் அக்குள் குளிர்ச்சியாக இருக்கும்.

தண்ணீர் குடிக்கவும்

    நிறைய தண்ணீர் குடிப்பதாலும், அதிக நீர்ச்சத்து உள்ள உணவுகளை உண்பதாலும், உடலை குளிர்ச்சியாக வைப்பதோடு அக்குளில் வியர்ப்பதையும் தடுக்கலாம்.

புகைபிடிப்பதை நிறுத்துங்கள்

    சிகரெட்டில் உள்ள நிகோடின், காஃபின் போன்றவை உடல் வெப்பநிலையை அதிகரித்து இதயத்தை வேகமாகத் துடிக்க செய்து, வியர்வை சுரப்பிகளை துண்டடி வியர்வையை உண்டாக்கும். இதனால் சிகரெட் புகைப்பதை விட்டுவிடுவதன் மூலம் அக்குள் வியர்வையைக் குறைக்கலாம்.