சுருட்டை முடியின் வளர்ச்சியை அதிகரிக்க இந்த பேக் போடுங்க.. சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்!


Alagar Raj AP
10-05-2024, 14:54 IST
www.herzindagi.com

    சாதாரண முடியை பரம்பரிப்பதை விட சுருட்டை முடியை பரம்பரிப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. அதற்கென தனி கவனம் செலுத்தினால் மட்டுமே முடி ஆரோக்கியமாக இருக்கும். எனவே இந்த பதிவில் சுருட்டை முடிக்கு பயனுள்ள கடுகு எண்ணெய் யோகர்ட் ஹேர் மாஸ்க் குறித்து பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

    2 டீஸ்பூன் கடுகு எண்ணெய் மற்றும் 3 டீஸ்பூன் யோகர்ட்

ஸ்டெப் 1

    முதலில் தலை முடியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டெப் 2

    2 டீஸ்பூன் கடுகு எண்ணெயுடன் 3 டீஸ்பூன் தயிரை கலந்து முடியில் தடவுங்கள்.

ஸ்டெப் 3

    பின் 45 நிமிடங்கள் கழித்து ஹேர் மாஸ்க்கை கழுவ தலைக்கு குளியுங்கள்.

வாரத்திற்கு இருமுறை

    இப்படி வாரத்திற்கு இருமுறை இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க தலையில் இறந்த செல்களை அழித்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் சுருட்டை முடியில் பிரகாசம் அதிகரிக்கும்.

முடிக்கு கடுகு எண்ணெயின் நன்மைகள்

    கடுகு எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ, ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் பொடுகு மற்றும் முடி உதிர்வதை தடுத்து முடி வளர்ச்சியை தூண்டும்.

முடிக்கு யோகர்ட்டின் நன்மைகள்

    முடி வளர்ச்சிக்கு உதவும் முக்கிய மூலப்பொருளான வைட்டமின் பி யோகர்ட்டில் உள்ளது. மேலும் இது முடி உதிர்வதையும் தடுக்கிறது.