தலைமுடி உறுதியாக இந்த விஷயங்களை செய்யுங்கள்


Sreeja Kumar
27-09-2023, 09:58 IST
www.herzindagi.com

செம்பருத்தி இலை

    அடர்த்தியான முடி மற்றும் தலைமுடி வளர்ச்சிக்கு செம்பருத்தி இலை பெரிதும் உதவுகிறது. இதற்கு நீங்கள் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி இலைகளை போட்டு ஊற வைத்து அதை பயன்படுத்தலாம். மேலும் இலையை அரைத்து தலையிலும் தடவலாம்.

Image Credit : google

சீயக்காய் பயன்பாடு

    அடர்த்தியான முடிக்கு ஷாம்பூகளை காட்டிலும் சீயக்காய் பொடியே நல்லது என்கின்றனர் அழகு கலை நிபுணர்கள். கெமிக்கல் ஷாம்பூகளை தலை முடியில் பயன்படுத்துவதை விட மூலிகை பொருட்கள் சேர்த்து அரைக்கப்படும் சீயக்காய் பொடியை பயன்படுத்தி முடியை அலசி எடுக்கவும்.

Image Credit : google

கறிவேப்பிலை

    பெண்களின் முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை மிகச் சிறந்த வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. கறிவேப்பிலையை சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கு நல்லது. அதே போல் கறிவேப்பிலையை அரைத்து பொடியாக்கி அதை தலையில் தடவியும் குளிக்கலாம். முடி நன்கு அடர்த்தியாக வளரும்.

Image Credit : google

முடி பராமரிப்பு

    அடர்த்தியான முடியை பெற பெண்கள் தலையில் கட்டாயம் எண்ணெய் வைப்பதை முறையாக பின்பற்ற வேண்டும். வாரத்தில் குறைந்தது 2முறை தலைக்கு எண்ணெய் தடவி நன்கு மசாஜ் செய்து பின்பு தலைமுடியை சுத்தமான நீரில் அலசி எடுக்கவும்.

Image Credit : google

உணவு முறை

    முடி வளர்ச்சிக்கு ஆரோக்கியமான உணவு முறை மிக மிக அவசியம். பழங்கள், காய்கறிகள், நட்ஸ்கள் ஆகியவற்றை முறையாக எடுத்து கொள்ள வேண்டும். உடலில் ஊட்டச்சத்துகள் குறையும் போதும் முடி அதிகம் உதிரலாம்.

Image Credit : google

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : google