10 நிமிடம் போதும், மூக்கில் உள்ள வெள்ளை புள்ளிகளை நீக்கலாம்


Alagar Raj AP
15-04-2025, 16:51 IST
www.herzindagi.com

வெள்ளை புள்ளிகள்

    மூக்கை சுற்றியுள்ள வெள்ளை புள்ளிகள் குளோஸ்ட் காமெடோன்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு வகையான முகப்பரு ஆகும்.

எப்படி ஏற்படுகிறது?

    நம் முகத்தில் ஏராளமான சிறிய துளைகள் இருக்கும், அந்த துளைகளில் இறந்த சரும செல்கள், எண்ணெய் பிசுக்கு, தூசி மற்றும் பாக்டீரியாக்கள் சிக்கி கொள்ளும் போது வெள்ளை புள்ளிகள் உருவாகும். மூக்கை சுற்றி எண்ணெயை உற்பத்தி செய்யும் செபேசியஸ் சுரப்பிகள் அதிக அளவில் இருப்பதால் வெள்ளை புள்ளிகள் மூக்கில் அதிகம் உருவாகிறது.

வீட்டு வைத்தியம்

    எனவே, வீட்டில் கிடைக்கும் சில பொருட்களை வைத்து மூக்கை சுற்றியுள்ள வெள்ளைப் புள்ளிகளை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

    1 தேக்கரண்டி பேக்கிங் சோடா, 1 தேக்கரண்டி தேன் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு

மூக்கை சுற்றி தேய்க்கவும்

    பேக்கிங் சோடா, தேன் மற்றும் எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து மூக்கை சுற்றி தேய்க்கவும். பின்னர் மெதுவாக மசாஜ் செய்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே உலரவிட்டு, பின்னர் உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் மூக்கில் உள்ள வெள்ளை புள்ளிகள் நீங்கி விடும்.

பேக்கிங் சோடாவின் நன்மைகள்

    பேக்கிங் சோடா எக்ஸ்ஃபோலியண்டாக செயல்பட்டு இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது.

தேனின் நன்மைகள்

    தேனில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் மற்றும் முகப்பருவை குறைக்கவும் உதவுகிறது.

எலுமிச்சை சாற்றின் நன்மைகள்

    எலுமிச்சை சாற்றில் சிட்ரிக் அமிலம் உள்ளது, இது சருமத்தின் அதிகப்படியான எண்ணெயை குறைக்கவும் உதவுகிறது.