பொடுகு பிரச்சனையை குணப்படுத்த சில வீட்டு வைத்தியம்
G Kanimozhi
20-05-2024, 12:04 IST
www.herzindagi.com
பொடுகு தொல்லை நீங்க வீட்டில் செய்யக்கூடிய எளிதான வழிமுறைகள்
தலையில் பொடுகு தொல்லை நீங்க பாலுடன் சிறிதுமிளகு பவுடரை சேர்த்து உங்கள் தலையில் தேய்த்து வரவும்.
சிறிது சின்ன வெங்காயம் எடுத்து மிக்ஸியில் அரைத்து தலையில் தேய்க்க வேண்டும். இதனை 15 நிமிடம் உலர வைத்து பிறகு தலைக்கு குளிக்கலாம்.
பொடுகு பிரச்சனை ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் வறண்ட சருமம் இதனை சரி செய்ய தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்.
வாரம் ஒரு முறையாவது தலையில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியம். இது உங்கள் உடல் சூட்டை கட்டுப்படுத்தி பொடுகு தொல்லை ஏற்படாமல் தடுக்க பெரிதும் உதவுகிறது.
எளிய முறையில் பொடுகு தொல்லையை குணப்படுத்த பசலை கீரையை நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு ஒழியும்.
இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்.