உங்கள் பயணத்திற்கு பேக் செய்ய வேண்டிய ஸ்கின் கேர் பொருட்கள்


Alagar Raj AP
14-02-2024, 14:00 IST
www.herzindagi.com

    பயணத்தின் போது உங்கள் சருமத்தை கவனித்துக் கொள்வது ஆரோக்கியமான மற்றும் நினைவான பயணத்திற்கு முக்கியமாகும். அதற்கு எந்த மாதிரியான ஸ்கின் கேர் பொருட்களை எடுத்துச் செல்வது என்று பார்ப்போம்.

ஹைட்ரேட்டிங் மிஸ்ட்

    வறண்ட சருமத்தில் நீரேற்றம் அளித்து சருமத்தை புதுப்பிக்க ஹைட்ரேட்டிங் மிஸ்ட் அவசியம்.

சன்ஸ்கிரீன்

    வெப்பமான பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளும் போது சூரிய வெப்பம் மற்றும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க SPF 50 அளவீடு உள்ள சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும்.

மாய்ஸ்சரைசர்

    மாய்ஸ்சரைசர்கள் சருமத்தின் காப்பான் போல் செயல்பட்டு மாசு மற்றும் கடுமையான வானிலை போன்ற சுற்றுச்சூழல் காரணிகளிலிருந்து பாதுகாக்கும். மேலும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.

ஹைட்ரேட்டிங் சீரம்

    ஹைட்ரேட்டிங் சீரம்கள் உங்கள் சருமம் உலர்வதை தடுத்து சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது.

கண் கிரீம்

    கண் கிரீம் பயன்படுத்துவது கண் வீக்கத்தில் இருந்து பாதுகாக்கும். மேலும் கண் பகுதிகளில் நாள் முழுவதும் ஈர்ப்பதை அளிக்கும்.

லிப் பாம்

    SPF அளவீடு கொண்ட லிப் பாம் பயன்படுத்துவதால் சூரியனுக்கு எதிராக உதடுகள் பாதுகாப்பாக இருக்கும். உலர்ந்த உதடுகளை ஈரப்பதமாக்குகிறது. மேலும் லிப் பாம் உதடுகளை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.