இதை செய்யுங்க வெறும் 5 நிமிடத்தில் பற்களை முத்து போல் ஜொலிக்க வைக்கலாம்!
Alagar Raj AP
03-07-2024, 15:36 IST
www.herzindagi.com
எங்கயாவது வெளியே செல்லும் போது பற்கள் மஞ்சளாக இருந்தால் அது நம்மை சுற்றி இருப்பவர்களிடம் நமக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். இந்த நிலை உங்களுக்கு வராமல் மஞ்சள் பற்களை உடனே முத்து போல் ஜொலிக்க வைக்க நாங்கள் சொல்லும் டிப்ஸை பாலோ பண்ணுங்க.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயை பற்களில் தேய்ப்பதால் மஞ்சள் நிறத்திற்கு பங்களிக்கும் பிளேக் நீக்கப்படும். இதனால் பற்கள் சுத்தமாக மாறும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றில் சமையல் சோடாவை பேஸ்ட் பதத்திற்கு கலந்து பற்களில் தேய்த்து கழுவினால் பற்கள் பளிச்சென்று மாறும்.
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரை கொண்டு உங்கள் வாயை கொப்பளியுங்கள். இது பற்களின் மஞ்சள் கறை மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும்.
ஆக்டிவேட்டட் கரி
அரை டீஸ்பூன் ஆக்டிவேட்டட் கரி பொடியை தண்ணீரில் பேஸ்ட் போல் கலந்து பற்களில் தேய்த்து கழுவினால் பற்கள் வெண்ணிறமாக மாறும்.
ஆரஞ்சு தோல்
ஆரஞ்சு தோலை கொண்டு உங்கள் பற்களின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் தேய்த்தால் பற்களில் மஞ்சள் கறை நீங்கும்.