ஸ்ட்ரெச் மார்க்கை மறைய செய்ய இந்த மூன்று பொருட்கள் போதும்!


Alagar Raj AP
21-06-2024, 13:23 IST
www.herzindagi.com

    கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்றில் ஸ்ட்ரெச் மார்க் தோன்றும், எடை அதிகம் உள்ள நபர்கள் சட்டென்று எடை குறையும் போது ஸ்ட்ரெச் மார்க் தோன்றும். இதை எப்படி மறைய செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான 3 பொருட்கள்

    5 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய், 4 வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்

ஸ்டெப் 1

    தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஆகியவற்றை நன்றாக கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டெப் 2

    இந்த எண்ணெயை இரண்டு சொட்டு விட்டு ஸ்ட்ரெச் மார்க் உள்ள பகுதியில் வட்டமாக தடவுங்கள்.

எத்தனை முறை பயன்படுத்தலாம்?

    ஸ்ட்ரெச் மார்க் மறைய இந்த எண்ணெயை தினமும் இரண்டு முறை பயன்படுத்தவும்.

தேங்காய் எண்ணெயின் நன்மை

    இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை மேம்படுத்த மேம்படுத்த உதவும்.

பாதாம் எண்ணெயின் நன்மை

    பாதாம் எண்ணெயில் வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் இதை சரும பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம்.

வைட்டமின் ஈ நன்மை

    ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் கொலாஜன் சேதத்தை நிலைப்படுத்தி ஸ்ட்ரெச் மார்க்கை குணப்படுத்த உதவுகிறது.

    நீங்கள் கர்ப்பிணியாக இருந்தால் இந்த பதிவில் உள்ள குறிப்புகளை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.