முகத்தை அழகாக பராமரிக்க பாதாம் எண்ணெய் பயன்படுத்தி பாருங்க!
G Kanimozhi
03-01-2025, 10:23 IST
www.herzindagi.com
பாதாம் எண்ணெய் வைத்து முகத்திற்கு மசாஜ் செய்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
இளமையான சருமம்
பாதாம் எண்ணெய்யை அடிக்கடி உங்கள் சருமத்தில் பயன்படுத்தி வந்தால் வயதாகும் அறிகுறிகளை தள்ளிப்போட்டு விடலாம்.
சன்ஸ்க்க்ரீன்
முகத்திற்கு பாதாம் எண்ணெய் தடவி வந்தால் இதில் உள்ள வைட்டமின் ஈ, சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களில் இருந்து நம் சருமத்தை பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது.
கருவளையம் நீங்கும்
தூக்கமின்மை மற்றும் ஒழுங்கற்ற உணவு முறை இவை இரண்டும் தான் நம் முகத்தில் ஏற்படும் கருவளையத்திற்கு முக்கிய காரணமாகும். கருவளையம் மற்றும் முகத்தில் உள்ள வீக்கத்தை குறைக்க பாதாம் எண்ணெய் சிறந்த தீர்வு.
புத்துணர்ச்சி
சருமம் புத்துணர்ச்சியடைய பாதாம் எண்ணெய் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது என்று கூறப்படுகிறது.
இயற்கை மாய்ஸ்சரைசர்
இந்த பாதாம் எண்ணெய் சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. மேலும் இந்த பாதாம் எண்ணெய் கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்வது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்