உங்கள் பிரிட்ஜில் இருந்து வரும் கெட்ட வாசனையை போக்க சிம்பிள் டிப்ஸ்
S MuthuKrishnan
02-12-2024, 08:00 IST
www.herzindagi.com
உங்கள் வீட்டில் உள்ள பிரிட்ஜில் உணவுப் பொருட்கள் திறந்து இருப்பதால் மற்றும் சில பொருட்கள் அழுகுவதால் பிரிட்ஜ் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் ஃப்ரிட்ஜை திறக்கும் போதெல்லாம் துர்நாற்றம் வீசுகிறது அதனை சில நிமிடங்களில் அகற்றுவது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம.
ஓட்ஸ்
நம் வீட்டில் உள்ள ஓட்ஸை வைத்து ஃப்ரிட்ஜில் வரும் துர்நாற்றத்தை போக்கலாம் அதற்கு ஓட்ஸை அலுமினிய பாத்திரத்தில் பிரிட்ஜினல் வைக்க வேண்டும் சிறிது நேரம் கழித்து பிரிட்ஜில் வரும் துர்நாற்றம் காணாமல் போய் விடுவதை பார்க்கலாம்.
வினிகர்
தின்பண்டங்கள் மற்றும் ஊறுகாய் செய்ய பயன்படுத்தும் வெள்ளை வினிகரை ஒரு கிண்ணத்தில் எடுத்து பிரிட்ஜ் திறந்து வைக்கவும். சிறிது நேரம் கழித்து பிரிட்ஜை திறந்து பார்த்தால் வாசனை முற்றிலும் மறைந்துவிடும்.
நியூஸ் பேப்பர்
ஃப்ரிட்ஜில் வரும் துர்நாற்றத்தை அகற்ற நியூஸ் பேப்பரை பல ரோல்களாக சுருட்டி பிரிட்ஜினல் வைக்கவும் இது துர்நாற்றத்தை அகற்ற உதவும்.
வெண்ணிலா எசன்ஸ்
ஒரு பருத்தித் துணியில் வெண்ணிலா எசென்ஸை ஊற்றி 24 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பிறகு திறந்தால் ஃப்ரிட்ஜில் வரும் வாசனை மறையும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில் கரைத்து வினிகர் சேர்த்து ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
இதையெல்லாம் தவிர்த்து அவ்வப்போது ஃப்ரிட்ஜை தொடர்ந்து சுத்தம் செய்து கொண்டே இருங்கள். இதன்மூலம் ஃப்ரிட்ஜில் வரும் துர்நாற்றத்தைப் போக்கலாம் மற்றும் பிரிட்ஜ் சேதமடைவதை தவிர்க்கலாம் அதிக நாட்கள் பிரிட்ஜின் கூலிங் தன்மை நிலைக்கும்.