உங்கள் வீட்டில் ஃபேன் ரொம்ப மெதுவா சுத்துதா? இந்த 4 டிப்ஸ் உங்க ஃபேன் ஸ்பீடை அதிகரிக்கும்
S MuthuKrishnan
30-03-2025, 06:00 IST
www.herzindagi.com
கொளுத்தும் வெயிலுக்கு எப்போதும் சுற்றும் மின்விசிறியின் வேகம் குறைவாக இருப்பதை உணரலாம். மின் விசிறி வேகத்தை வேகத்தை கூட்டினாலும், அது குறைவாக ஓடும். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இந்த டிப்ஸ்களை உங்கள் ஃபேனில் ட்ரை பண்ணிபாருங்க.
கெபாசிட்டரை மாற்றவும்
சீலிங் ஃபேனில் வேகம் குறைந்தால் முதலில் சரி பார்க்க வேண்டியது அதன் கெபாசிட்டரைதான்.கெபாசிட்டர் மாற்றினாலே ஃபேன் வேகமாக ஓட ஆரம்பித்து விடும்.முதலில் உங்களது ஃபேன் கெப்பாசிட்டர் நன்றாக இருக்கிறதா என சரி பார்த்து, புதிதாக மாற்றி விடுங்கள்.
சுத்தம் செய்யுங்கள்
இறெக்கைகள் தூசியால் அழுக்காக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அந்த தூசி இறெக்கையின் சுழற்சி வேகத்தை கட்டுப்படுத்தி காற்றோட்டத்தை பாதிக்கும். ஃபேன் பிளேடுகளை முதலில் உலர்ந்த துணியால் சுத்தம் செய்யவும், பின்னர் ஈரமான துணியால் சுத்தம் செய்யவும்.
ஃபேனை சரியான இடத்தில் வைக்கவும்
வெளியே இருந்து குளிர்ந்த காற்றை இழுப்பதற்கு ஜன்னலுக்கு நெருக்கமாக மின்விசிறியை வைக்கவும். மேலும் சீலிங்கில் இருந்து குறைந்தது இரண்டு அடி இடைவெளி இருக்கும் படி ஃபேனை சரியான இடத்தில் வைக்கவும்.
ஆயில் போடவும்
ஃபேன் பியரிங்கில் ஆயில் விடவும். ஒருவேளை பியரிங் பழுதாகி இருந்தால், கடையில் கொடுத்து புதிதாக மாற்றுவது நல்லது.