குளியலறை மற்றும் கழிப்பறையை வயதானவர்களுக்கு ஏற்றதாக மாற்றுவது எப்படி?


Alagar Raj AP
23-07-2024, 14:00 IST
www.herzindagi.com

    ஈரமான, வழுக்கும் தளங்கள், கடினமான மேற்பரப்புகள் போன்றவை வயதானவர்களுக்கு குளியலறையை ஆபத்தானதாக ஆக்குகின்றன. இதை சரி செய்து குளியலறையை வயதானவர்களுக்கு ஏற்றது போல் மாற்றியமைக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

கைப்பிடிகள்

    ஷவர் மற்றும் கழிப்பறைக்கு அருகே கைப்பிடியை நிறுவுங்கள். இது முதியவர்களுக்கு குளியலறை மற்றும் கழிப்பறை பயன்படுத்துவதை எளிதாக்கும்.

ஆண்டி ஸ்லிப் மேட்கள்

    குளியலறை மற்றும் கழிப்பறையில் ஆண்டி ஸ்லிப் மேட்களை பயன்படுத்துங்கள். ஆண்டி ஸ்லிப் மேட்கள் முதியவர்களை வழுக்காமல் பாதுகாக்கும்.

உயரமான கழிப்பறை

    வயதானவர்களுக்கு உயரமான கழிப்பறையை பயன்படுத்துவதற்கு வசதியாக இருக்கும். உட்காருவதையும் நிற்பதையும் உயரமான கழிப்பறை எளிதாக்குகிறது.

வெளிச்சம்

    குளியலறை மற்றும் கழிப்பறையில் போதுமான வெளிச்சத்தை உறுதி செய்யுங்கள், குறிப்பாக இரவில்.

நெம்புகோல் குழாய்கள்

    வட்டமான தலையை கொண்ட குழாய்கள் முதியவர்களுக்கு திருப்புப்புவது கடினமாக இருக்கும் என்பதால் அதற்கு பதில் நெம்புகோல் குழாய்களை நிறுவலாம். இதை திருப்புவது கடினமாக இருக்காது.

ஷவர் நாற்காலி

    குளியலறையில் ஷவர் நாற்காலி அல்லது பெஞ்சை வைக்கலாம். இது முதியவர்களுக்கு உட்கார்ந்து குளிப்பதற்கு உதவும்.