உங்கள் வீட்டின் பிரதான அறையை பிரகாசமாக காட்ட ஈஸியான டிப்ஸ்கள்
Alagar Raj AP
15-07-2024, 13:08 IST
www.herzindagi.com
உங்கள் வீட்டை பிரகாசமாகவும், காற்றோட்டமாகவும் மாற்ற விரும்பினால், அதை அடைய நாங்கள் கூறும் இந்த ஆறு எளிய உதவிக்குறிப்புகளை பாலோ பண்ணுங்க.
லைட் கலர் பெயிண்டிங்
மென்மையான வண்ணங்கள் அதாவது லைட் கலர் பெயிண்டிங் சுவர்கள் மற்றும் தளபாடங்கள் மீது ஒளி நிழல்களை பயன்படுத்தி அறையை பிரகாசமாக மற்றும் விசாலமாக இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கும்.
வெளிப்படையான திரைசீலைகள்
ஜன்னல்களுக்கு வெளிப்படையான லைட் கலர் தோற்றம் கொண்ட திரைச்சீலைகளை பயன்படுத்தலாம். அது இயற்கை ஒளியை பிரதான அறைக்குள் அதிகப்படுத்திக் காட்டும்.
உட்புற தாவரங்கள்
உட்புற தாவரங்களை வீட்டின் பிரதான அறையின் ஜன்னல்கள் அல்லது நன்கு ஒளிரும் இடங்களுக்கு அருகில் வைப்பது வீட்டில் பிரகாசமான சூழ்நிலையை உருவாக்கும்.
கண்ணாடிகள்
வீட்டில் ஜன்னல்களுக்கு குறுக்கே பெரிய கண்ணாடிகளை வைப்பது இயற்கை ஒளியை பெருக்கி இடத்தைப் பெரிதாக்கி காட்டும்.
பிரகாசமான கம்பளம்
பிரகாசமான நிறம் கொண்ட பெரிய கம்பளங்கள் தரையின் ஒளியை பளிச்சென்று காட்டும் மற்றும் இடத்தையும் பெரிதாக காட்டும்.
ஜன்னல் நிறம்
வீட்டின் ஜன்னல்கள் நிறத்தை வெள்ளை போன்ற வெளிர் நிறத்தில் இருந்தால் அது அறைக்குள் அதிக இயற்கை ஒளியை பரிபாலிக்கும்.