தீபாவளியில் உங்க வீட்டு வாசலை அழகுபடுத்தும் 7 ரங்கோலி கோலங்கள்


Alagar Raj AP
25-10-2024, 17:43 IST
www.herzindagi.com

மலர் ரங்கோலி

    மிக அழகான நான்கு மலர்கள் ஒன்றோடு ஒன்று இணைத்துள்ள மலர் ரங்கோலியால் உங்கள் வீடு தீபாவளியன்று புத்துயிர் பெறும்.

மயில் ரங்கோலி

    இந்த ரங்கோலி ஒரு யில் வடிவத்தில் வெவ்வேறு வண்ணங்களின் கலவையைக் கொண்டுள்ளது. நீங்கள் ரங்கோலியில் கைதேர்ந்தவர் என்றால் இதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

கம்பி கோலம்

    உங்களுக்கு கோலம் போட தெரியாது அல்லது இப்போது தான் கோலம் போட கற்றுக் கொள்கிறீர்கள் என்றால் இந்த எளிய கம்பி கோலம் உங்களுக்கு சரியாக இருக்கும்.

பட்டை கொல்லம்

    நட்சத்திரத்திற்கு நடுவே உள்ள பட்டை கொல்லம் வீட்டிற்கு மங்களகரமான தோற்றத்தை கொடுக்கும். நீங்கள் ஆன்மிகவாதி அல்லது சிவ பக்தராக இருந்தால் இந்த கோலம் உங்கள் பக்தியை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும்.

பார்டர் ரங்கோலி

    இந்த பார்டர் ரங்கோலி மற்றவர்களிடம் இருந்து உங்கள் வீட்டை தனித்து காண்பிக்கும். மாலை நேரங்களில் அகல் விளக்கை ஏற்றி பார்டர் ரங்கோலியில் வைத்தால் பிரமாதமாக காட்சியளிக்கும்.

அரை வட்ட ரங்கோலி

    உங்கள் வீட்டு வாசலில் இடப்பற்றாக்குறை இருந்தால், தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள இந்த அரை வட்ட ரங்கோலி டிசைனை இந்த தீபாவளிக்கு முயற்சி செய்து பாருங்கள்.

தீபாவளி ஸ்பெஷல் ரங்கோலி

    உங்கள் ரங்கோலி மூலம் மற்றவர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்க இந்த ஸ்பெஷல் ரங்கோலி சரியாக இருக்கும்.