தாவரங்களுக்கு பயன்படுத்த வீட்டில் கிடைக்கும் 7 இயற்கை உரங்கள்
Alagar Raj AP
11-10-2024, 15:06 IST
www.herzindagi.com
சோறு வடித்த தண்ணீர்
சோறு வடித்த தண்ணீரில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற ஏராளமான தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை தாவர வளர்ச்சிக்கு அவசியம். சோறு வடித்த நீரை ஆற வைத்து உரமாக பயன்படுத்தலாம்.
காபித்தூள்
காபித்தூளில் மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் காபித்தூள் மண்ணின் அமிலத்தன்மையை அதிகரித்து தாவர வளர்ச்சிக்கு உதவும். காபித்தூளை தாவரம் உள்ள மண்ணில் பரப்பி உரமாக பயன்படுத்துங்கள்.
மீன் தொட்டி தண்ணீர்
மீன் தொட்டி தண்ணீரில் கலந்திருக்கும் மீனின் கழிவுகளில் நைட்ரஜன் மற்றும் தாவரங்கள் செழித்து வளர தேவையான பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும். ஆகையால் மீன் தொட்டி தண்ணீரை உரமாக பயன்படுத்தலாம்.
மரக்கட்டை சாம்பல்
மரக்கட்டை சாம்பலில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் கார்பனேட் நிறைந்துள்ளது. இவை தாவரங்களை மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. சாம்பலை அப்படியே மண்ணின் மேல் தூவி விடலாம்.
புற்க்கழிவுகள்
தோட்டத்தில் தேவையில்லாமல் புல் வளர்ந்திருந்தால் அவற்றைப் பிடுங்கி தாவரங்களுக்கு உரமாக பயன்படுத்தலாம். புற்கள் தாவரங்களுக்கு தேவையான நைட்ரஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை அளிக்கும்.
முட்டை ஓடுகள்
முட்டை ஓடுகள் முழுக்க முழுக்க கால்சியம் கார்பனேட்டால் நிரம்பியுள்ளது. இவை தாவரங்கள் செழித்து வளர உதவுகிறது. முட்டை ஓடுகளை உலர வைத்து, அரைத்து உரமாக பயன்படுத்தலாம்.
வாழைப்பழ தோல்
வாழைப்பழ தோல் பொட்டாசியத்தின் நல்ல மூலமாக இருப்பதால் இது தாவரங்களின் வேர்களை வலுப்படுத்தவும், நோய் தொற்று பாதிக்காமலும் தடுக்கிறது. 2-3 லிட்டர் தண்ணீரில் வாழைப்பழ தோலை இரண்டு வாரங்கள் ஊற வைத்து அந்த நீரையும், தோலையும் உரமாக பயன்படுத்தலாம்.