வீட்டுத் தோட்டத்தில் ரோஜாக்கள் பூத்துக் குலுங்கணுமா? இந்த 6 தப்பை செய்யாதீங்க!


Alagar Raj AP
06-09-2024, 16:00 IST
www.herzindagi.com

    பூச்செடி என்று வந்தாலே மக்கள் முதலில் தேர்வு செய்வது ரோஜா செடியை தான். அப்படி நீங்கள் ஆசை ஆசையாக வளர்த்து வரும் ரோஜா செடியில் ரோஜாக்கள் பூக்காமல் இருப்பதற்கான காரணங்களை இந்த பதிவில் ஆராய்வோம்.

சூரிய ஒளி

    ரோஜாக்கள் வளர ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு மணி நேர நேரடி சூரிய ஒளியில் இருப்பது அவசியம் என்பதால் உங்கள் ரோஜா செடிக்கு போதிய சூரிய ஒளி கிடைக்கிறதா என்பதை சரி பாருங்கள்.

உரம்

    அதிக நைட்ரஜன் உள்ள உரங்களை ரோஜா செடிகளுக்கு பயன்படுத்த கூடாது. ஆகையால் பாஸ்பரஸ், மெக்னீசியம், நைட்ரஜன் ஆகிய கலவைகள் சமச்சீராக உள்ள உரங்களை ரோஜா செடிக்கு பயன்படுத்த வேண்டும்.

மண்

    மண்ணில் அதிகப்படியான கற்கள், மணல் இருந்தால் ரோஜாக்கள் பொதுவமான ஊட்டச்சத்துக்களை மண்ணில் இருந்து உறிஞ்ச முடியாது. எனவே செடியை நடவு செய்வதற்கு சுத்தமான மண் இருக்கும் இடத்தை தேர்வு செய்யுங்கள்.

தண்ணீர்

    ரோஜா செடிகளுக்கு அதிகமாக இல்லை மிக குறைவாக தண்ணீர் பாய்ச்சுவது செடியை சேதமடைய செய்யும். எனவே மண்ணின் ஈரப்பதத்தை சரியாக பராமரியுங்கள்.

கத்தரித்தல்

    ரோஜா செடிகளை கத்தரிப்பது அவற்றை அதிகம் செழித்து வளர செய்யும். எனவே இறந்த மற்றும் பலவீனமான தண்டுகளை அகற்றிவிடுங்கள். இருந்தாலும் அளவுக்கு அதிகமாக கத்தரிப்பது செடியின் வளர்ச்சியை பாதிக்கும்.

நோய் மற்றும் பூச்சிகள்

    ரோஜா செடி நோய் அல்லது பூச்சிகள் தாக்கினால் அவற்றின் வளர்ச்சியில் தடை ஏற்படும். இதனால் மொட்டுகள் இழப்பு, இலைகளில் நிறம் மாறுதல், பலவீனமான செடி, கரும்புள்ளிகள் ஏற்படும். இதை தடுக்க சரியான பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துங்கள்.