உங்கள் சுற்றுப்புறங்களில் இருந்து கொசுக்களை விலக்கி வைக்கும் இயற்கையாகவே கொசுக்களை விரட்டும் தன்மையுள்ள 6 செடிகள் குறித்து பார்க்கலாம்.
ஓமம்
மருத்துவ குணங்கள் நிறைந்த ஓமம் கொசுக்களை சுற்றுப்புறங்களில் நெருங்க விடாது. இதை நீங்கள் சுலபமாக தொட்டியில் வளர்க்கலாம்.
துளசி செடி
சாதாரணமாக எல்லா சூழல்களிலும் வளரக்கூடிய செடி துளசி. இதன் நறுமணம் ஈக்கள் மற்றும் கொசுக்களை அருகே நெருங்க விடாது.
சாமந்திப்பூ செடி
ஆன்மிக நிகழ்வுகளில் பயன்படும் சாமந்திப்பூ கொசுக்கள் அருகில் வராமல் தடுக்கக்கூடிய வாசனையை வெளியற்றும். மேலும் சாமந்திப்பூவின் நிறம் உங்களுக்கு வீட்டிற்கு கூடுதல் அழகு சேர்க்கும்.
கற்பூரவல்லி
கற்பூரவள்ளி மனம் கொசுக்களை அருகே ஆண்ட விடாது. இதை சின்ன தொட்டியில் வளர்த்து ஜன்னல் ஓரத்தில் வைத்து விடுங்கள்.
ரோஸ்மேரி செடி
ரோஸ்மேரி கொசுக்கள் மட்டுமல்ல சிறிய பூச்சிகளையும் நெருங்க விடாது. மேலும் இதன் நறுமணம் உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
புதினா செடி
புதினா சமைப்பதற்கு மட்டும் பயன்படாமல் கொசுக்கள் மற்றும் எறும்புகளை தடுக்கும் அரணாகவும் செயல்படுகிறது. புதினா செடிக்கு குறைந்த பராமரிப்பே போதுமானது.