வீட்டில் உள்ள தூசியை எத்தனை முறை சுத்தம் செய்தாலும் சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் தூசி படிந்துவிடும். குறிப்பாக நகர்ப்புறங்களில் உள்ள வீடுகள், கட்டுமானம் நடைபெறும் பகுதிக்கு அருகில் உள்ள வீடுகள் மற்றும் பிரதான சாலையை ஒட்டியுள்ள வீடுகளில் தூசி பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
தூசியை குறைக்கும் தாவரங்கள்
நாம் வீட்டுக்குள் அழகுக்காக வளர்க்கும் தாவரங்கள் காற்றின் தரத்தை மேம்படுத்துவது, மன நலனை மேம்படுத்துவது போன்ற பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. இது போன்று சில உட்புற தாவரங்கள் வீட்டில் உள்ள தூசியை குறைக்க உதவுகின்றன.
சிலந்தி செடி
இதன் வெள்ளை நிற கோடுகளுடன் கூடிய நீண்ட மெல்லிய இலைகள் இயற்கையாகவே தூசித் துகள்களை ஈர்க்கும் தன்மையுடையது.
பீஸ் லில்லி
நேர்த்தியான வெள்ளை பூக்கள் மற்றும் காற்றைச் சுத்திகரிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்ற பீஸ் லில்லி, காற்றில் இருந்து ஃபார்மால்டிஹைட், அம்மோனியா மற்றும் பென்சீன் போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை நீக்குகிறது.
மூங்கில் செடி
நாம் வசிக்கும் பகுதியில் காற்று மண்டலத்தில் காணப்படும் அனைத்து வகையான தூசிகளை இரசாயனங்களையும் நீக்கும் பணியை மூங்கில் செடி மிகச் சிறப்பாக செய்யும்.
பாம்பு செடி
பாம்பு செடி தீங்கு விளைவிக்கும் மாசுக்களை உறிஞ்சி, இரவில் ஆக்ஸிஜனை வெளியிடுகிறது, இதனால் நீங்கள் இரவில் தூங்கும் போது காற்றின் தரம் மேம்படும்.
கற்றாழை
பல ஆரோக்கிய நன்மைகளுக்காக அறியப்படும் கற்றாழை, தூசியை ஈர்க்கும் திறன் மற்றும் காற்றை சுத்திகரிக்கும் திறனை கொண்டுள்ளது. மற்ற செடிகளை காட்டிலும் இதற்கு குறைந்த பராமரிப்பே போதுமானது.