வீட்டில் எந்த திசையில் கடிகாரம் இருக்க வேண்டும்? வாஸ்து கூறுவது என்ன?


Alagar Raj AP
15-03-2024, 14:36 IST
www.herzindagi.com

கடிகாரம் வாஸ்து

    வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் கடிகாரம் இருக்கும் இடத்தை பொறுத்து நமக்கு நல்லது கேட்டது நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதற்காக வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க கடிகார வாஸ்து குறிப்புகளை காண்போம்.

வடக்கு

    வடக்கு திசை செல்வத்தின் கடவுளான குபேரனும், விநாயகப் பெருமானும் ஆள்வதாக கூறப்படுகிறது. எனவே வடக்கு நோக்கிய கடிகாரம் இருந்தால் செல்வம் அதிகரிக்கும்.

தெற்கு

    மரணத்தின் கடவுளான எமன் தெற்கு திசையை ஆள்வதாக கூறப்படுகிறது. ஆகையால், தெற்கு திசையை நோக்கி கடிகாரத்தை வைக்க கூடாது.

கிழக்கு

    சூரியன் உதிக்கும் திசையில் இருக்கும் கிழக்குத் திசையை நோக்கி கடிகாரத்தை தொங்க விட்டால் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.

படுக்கையறை

    படுக்கையறையில் பெண்டுலம் கடிகாரங்களை வைக்க கூடாது. அப்படி வைத்தால் வீட்டில் உள்ளவர்களின் வாழ்க்கை ஊசலாட தொடங்கி விடும்.

வீட்டின் நுழைவாயில் மேல்

    வீட்டின் நுழைவாயிலுக்கு மேல் சுவர் கடிகாரங்களை வைக்க வேண்டாம். அது உங்களை பெரும் நிதி சுமைக்கு ஆளாக்கிவிடும்.

    இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் பொதுவான வாஸ்து தகவல். எந்த தகவலும் எங்கள் தனிப்பட்ட தகவல்கள் அல்ல.