வலியே இல்லாமல் தற்காலிகமாக விதவிதமான பச்சைக் குத்திக் கொள்ள வேண்டுமா? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க
Jansi Malashree V
15-01-2025, 22:04 IST
www.herzindagi.com
உங்களுக்கு பச்சைக் குத்திக் கொள்ளும் ஆசை இருந்தால், மேக் அப் போடுவது போன்று தற்காலிகமாக விதவிதமான மாடல்களில் பச்சைக் குத்திக் கொள்ளலாம். அதற்கான டிப்ஸ்கள் இங்கே
ஸ்டெப் 1:
கைகள் அல்லது எந்த இடத்தில் டாட்டூ எனப்படும் பச்சைக் குத்தப் போகிறீர்களோ? அங்கு டூத் பேஸ்ட் உபயோகித்து முதலில் சுத்தம் செய்துக் கொள்ளவும்.
ஸ்டெப் 2 :
அடுத்ததாக கடைகளில் விற்பனை செய்யப்படும் சிடி மார்க்ர் (CD marker) அல்லது ஐலைனரைக் கொண்டு கைகளில் பிடித்த டிசைன்களை வரைந்துக் கொள்ளவும்.
ஸ்டெப் 3:
வரைந்த டிசைகள் அழியாமல் இருப்பதற்காக ஏதாவது ஒரு பவுடரை அப்ளை செய்து துடைத்துக் கொள்ளவும். இதே போன்று வரைந்த டிசைன்களை மீண்டும் மீண்டும் அதே வழிமுறைகளை மேற்கொள்ளவும்.
ஸ்டெப் 4:
இறுதியாக நீங்கள் வரைந்து வைத்துள்ள டாட்டூவிற்கு மேலாக வாசிலின் அப்ளை செய்துக் கொள்ளும் போது பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி தற்காலிகமாக உங்களுக்குப் பிடித்த டாட்டூடை எங்கு வேண்டுமானாலும் வரைத்து மகிழ்ச்சி அடையுங்கள்.