உலகின் மிக விலையுயர்ந்த டாப் 6 காலணிகள் லிஸ்ட்


Alagar Raj AP
10-04-2024, 12:16 IST
www.herzindagi.com

    காலணிகள் ஒரு காலத்தில் கால்களின் பாதுகாப்பிற்காக மட்டுமே அணியப்பட்ட நிலையில் தற்போது அவை அதிக டாலர்கள் மதிப்புள்ள ஆடம்பர பொருளாக மாறி வருகிறது. இந்த பதிவில் உலகின் மிக விலையுயர்ந்த டாப் 6 காலணிகளை காண்போம்.

ரீட்டா ஹேவொர்த் ஹீல்ஸ் - 3 மில்லியன் டாலர்

    ஆடம்பர காலணிகளை தயாரிக்கும் நிறுவனமான ஸ்டூவர்ட் வெயிட்ஸ்மேன் நிறுவனம் தயாரித்த ரீட்டா ஹேவொர்த் ஹீல்ஸின் மதிப்பு 3 மில்லியன் டாலர்கள்.

ரூபி ஸ்லிப்பர்ஸ் - 3 மில்லியன் டாலர்

    ஹாரி வின்ஸ்டன் என்னும் நகை தயாரிப்பு நிறுவனம் உருவாக்கிய ரூபி ஸ்லிப்பர்ஸின் மதிப்பு 3 மில்லியன் டாலர்கள். இது 1,350 காரட் மதிப்புள்ள 4,600 மாணிக்கங்கள் மற்றும் 50 காரட் வைரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஜார்ஜ் புஷ் மீது வீசப்பட்ட காலணிகள் - 10 மில்லியன் டாலர்

    டிசம்பர் 14, 2008 அன்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மீது ஈராக் பத்திரிகையாளர் முந்தாதர் அல்-ஜைதி வீசிய காலணிகள் 10 மில்லியன் டாலர்களுக்கு வாங்கப்பட்டன.

டெபி விங்ஹாம் ஹீல்ஸ் - 15.1 மில்லியன் டாலர்

    பிரிட்டிஷ் வடிவமைப்பாளர் டெபி விங்ஹாம் தனியார் வாடிக்கையாளருக்கு வடிவமைத்த காலணிகளின் உலகின் விலையுயர்ந்த காலனிகளில் 3வது இடத்தை பிடித்துள்ளது. மூன்று கேரட் இளஞ்சிவப்பு மற்றும் ஒரு காரட் நீல வைரங்கள், பிளாட்டினம் தகடுகள், 18 காரட் தங்க நூல் ஆகியவற்றை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இதன் மதிப்பு 15.1 மில்லியன் டாலர்.

பேஷன் டயமண்ட் ஷூஸ் - 17 மில்லியன் டாலர்

    ஜடா துபாய் மற்றும் ஃபேஷன் ஜூவல்லர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கிய பேஷன் டயமண்ட் ஷூவின் மதிப்பு 17 மில்லியன் டாலர். 236 வைரங்களை கொண்டு இந்த ஷூ உருவாக்கப்பட்டுள்ளது.

மூன்ஸ்டார் ஷூஸ் - 20 மில்லியன் டாலர்

    இத்தாலிய காலணி வடிவமைப்பாளர் அன்டோனியோ வியட்ரி உருவாக்கிய ஷூ உலகின் விலையுயர்ந்த காலனிகளில் முதல் இடத்தில் உள்ளது. இந்த ஷூவின் மதிப்பு 20 மில்லியன் டாலர்.