எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமா? இந்த உணவுகளைக் கட்டாயம் சாப்பிடுங்க!
Jansi Malashree V
02-08-2024, 15:30 IST
www.herzindagi.com
முகம் பளபளப்பாகவும், இளமையான தோற்றத்தைப் பெறுவதற்கு கீழ்வரக்கூடிய சில உணவுகளை டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தண்ணீர் குடித்தல்:
உடல் எப்போதும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றால் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகளவு நீர்ச்சத்துக்கள் உடலைப் பொலிவுடன் வைத்திருக்கும்.
கொழுப்பு மீன்கள்:
ஒமேகா 3 கொண்ட கொழுப்பு நிறைந்த மீன்கள் உடலுக்கு சத்தானதோடு, ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
காய்கறிகள்:
வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளைக் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பழங்கள்:
பப்பாளி,நெல்லிக்காய் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களைச் சாப்பிட வேண்டும்.