பிளாஸ்டிக் வாளியில் இருந்து உப்பு நீர் கறைகளை அகற்ற டிப்ஸ்
Alagar Raj AP
28-02-2025, 14:26 IST
www.herzindagi.com
உப்பு நீர் கறை
பிளாஸ்டிக் வாளி மற்றும் கப்பில் உப்பு தண்ணீரை பயன்படுத்தும் போது காலப்போக்கில் அதன் பளபளப்பு மங்கி வெள்ளை நிறத்தில் உப்பு கறை உருவாகி மோசமாக காட்சியளிக்கும். இந்த உப்பு கறையை வீட்டில் கிடைக்கும் சில பொருட்களை வைத்து எப்படி சுத்தம் செய்யலாம் என்பதை பார்ப்போம்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் கறைகளை அகற்றும் தன்மையுடையது. எலுமிச்சை சாற்றை பிளாஸ்டிக் வாளியின் உப்பு கறைகளில் தடவி ஒரு மணி நேரம் அப்படியே விட்டு பிரஷை பயன்படுத்தி தேய்த்து கழுவினால் உப்பு கரை நீங்கும்.
சமையல் சோடா
சமையல் சோடாவில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். அந்தப் பேஸ்ட்டை உப்பு கறை உள்ள வாளி மற்றும் கப்பில் தேய்த்து 10-15 நிமிடங்கள் அப்படியே விட்டு தேய்த்து கழுவினால் கறை நீங்கி புதிது போல் காட்சியளிக்கும்.
பற்பசை
பற்பசையில் லேசான சிராய்ப்பு பண்புகள் உள்ளன. இது கறைகளை சுத்தம் செய்ய உதவுகிறது. உப்பு கறை மீது வெள்ளை பற்பசையை பிரஷை வைத்து தேய்த்து 10 நிமிடங்கள் அப்படியே விட்டு தண்ணீரில் கழுவினால் வாளி சுத்தமாகும்.
வினிகர்
நீங்கள் பயன்படுத்தும் வினிகரில் சம அளவு தண்ணீர் கலக்கவும். பின்னர் ஒரு துணி அல்லது பிரஷை வினிகர் கலவையில் நனைத்து உப்பு கறைகளின் மீது தேய்த்து கழுவினால் வாளி மற்றும் கப் பளபளப்பாக மாறும்.
டாய்லெட் கிளீனர்
கடினமான உப்பு கறைகளை நீக்க டாய்லெட் கிளீனர் நல்ல வழியாகும். டாய்லெட் கிளீனரை வாளியில் பிரஷால் தடவி 2 நிமிடங்கள் அப்படியே விட்டு தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்தால் உடனடியாக உப்பு கறை நீங்கி புதிது போல் காட்சியளிக்கும்.
ப்ளீச்
தண்ணீரில் ப்ளீச்சை பேஸ்ட் போல் கலக்கவும். பின்னர் ஒரு பிரஷில் ப்ளீச் பேஸ்ட்டை தொட்டு வாளியில் தேய்த்து தண்ணீர் ஊற்றி கழுவினால் வாளி பளிச்சென்று மாறும். ப்ளீச் பயன்படுத்துவதால் வாளியில் உள்ள கிருமிகளும் அழியும்.