கிச்சன் சின்க் அழுக்குடன் துர்நாற்றம் வீசுகிறதா? சரி செய்ய இத மட்டும் செய்யுங்க!


Jansi Malashree V
22-07-2024, 11:20 IST
www.herzindagi.com

    இது ஒருபுறம் இருந்தாலும் பாத்திரம் கழுவும் இடமான சின்கில் கழிவுகள் அடைபட்டால் ஏற்படும் தண்ணீர் தேங்குவதை சரி செய்வது அதை விட பெரும் கஷ்டம். இதோ சரி செய்வதற்கான சிம்பிள் டிப்ஸ் உங்களுக்காக.

அடிக்கடி சுத்தம் செய்தல்:

    பெண்கள் சந்திக்கும் பெரும் துயரங்களில் ஒன்று சின்க்கை சுத்தம் செய்வது. இதை சுலபமாக்க வேண்டும் என்று நினைத்தால், அடிக்கடி சுத்தம் செய்துக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக சாப்பிட்ட தட்டில் இருக்கும் தக்காளி, கறிவேப்பிலை போன்ற கழிவுகளை அவ்வப்போது அகற்றிக் கொள்ள வேண்டும்.

சமையல் சோடா எலுமிச்சை:

    பாத்திரம் கழுவும் சின்க் ல் உள்ள அழுக்குகளை அகற்றுவதற்கு, பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சை சாறு கலந்துக் கொண்டு சுத்தம் செய்யவும்.

வெதுவெதுப்பான நீர்:

    பாத்திரங்கள் அனைத்தையும் கழுவிய முடித்த பின்னதாக, தண்ணீரை வெதுவெதுப்பாக காய்ச்சிக் கொண்டு சின்க் ல் ஊற்ற வேண்டும். இது படிந்துள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகளை அகற்ற உதவியாக இருக்கும்.

தேங்காய் நார்:

    சின்க் ல் நாள்கணக்கில் படிந்துள்ள அழுக்குளை நீக்குவதற்கு தேங்காய் நாரைப் பயன்படுத்தவும். கோலப் பொடி அல்லது சபீனா போன்றவற்றை தூவி விட்டு அரை மணி மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் தேங்காய் நாரை நனைத்துக் கொண்டு தேய்த்தால் போதும்.

    இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், சின்க் முறையாகப் பயன்படுத்துவது அனைவரின் கடமை. குப்பைகளை வெளியில் சென்று போடமுடியவில்லை என்றாலும், சின்கிற்கு அருகில் பழைய பிளாஸ்டிக் கவர் அல்லது ஒரு பாத்திரத்தை அருகில் வைக்கவும். இதில் குப்பைகளைப் போட்டு விடும் போது தேவையில்லாமல் தண்ணீர் அதிகளவில் தேங்குவதற்கு வாய்ப்பில்லை.