அடுப்பு பர்னரில் படியும் கரியை எளிதில் நீக்க இந்த டெக்னிக் உங்களுக்கு உதவும்


Alagar Raj AP
09-08-2024, 15:00 IST
www.herzindagi.com

கரி படிவதால் என்ன ஆகும்?

    கேஸ் அடுப்பின் பர்னரில் கரி படிவதால் அதில் படிப்படியாக அடைப்பு ஏற்பட்டு தீ சரியாக எரிய முடியாமல் போகும்.

கரியை எப்படி நீக்குவது?

    நாம் எவ்ளோ முயற்சி செய்து துடைத்தாலும் கரி போகாது. ஆனால் நாங்கள் சொல்லும் இந்த குறிப்புகளை பின்பற்றினால் பர்னரில் உள்ள கரியை எளிதில் நீக்கிவிடலாம்.

தேவையான பொருட்கள்

    ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர், பாதி எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் சமையல் சோடா, ஒரு டீஸ்பூன் வினிகர் மற்றும் சிறிது உப்பு

ஸ்டெப் 1

    வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, சமையல் சோடா, வினிகர் மற்றும் உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டெப் 2

    அடுத்ததாக பர்னரை கழட்டி இந்த கலவையில் 3 - 4 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.

ஸ்டெப் 3

    நன்றாக ஊறியதும் பர்னரை பிரஷ் வைத்து நன்றாக தேய்த்து தண்ணீரில் கழுவவும்.

    இப்படி செய்தால் பர்னரில் உள்ள கரி நீங்கி பளபளப்பாக புதுசு போல் காட்சியளிக்கும்.