பணத்தை சேமிப்பதற்கான 6 பழக்கங்கள்


Alagar Raj AP
03-01-2024, 12:05 IST
www.herzindagi.com

    உங்களின் நிதித் திட்டத்தின் ஒரு பகுதியாக சேமிப்பு இருக்க வேண்டும். உங்கள் அன்றாட வாழ்க்கையில் சில சிறிய சேமிப்புகளை செய்வதன் மூலம் உங்கள் நிதி பற்றாக்குறையை சமாளிக்கலாம்.

கிரெடிட் கார்டுகளை தவிர்க்கவும்

    கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தாமல் ரொக்கம் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்துங்கள். அவசர தேவைகளுக்கு மட்டும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தவும்.

பட்டியலிட்டு கொள்ளுங்கள்

    ஷாப்பிங் செய்வதற்கு முன் உங்களுக்கு தேவையான பொருட்களை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். முடிந்த வரை பட்டியலில் உள்ள பொருட்களை மட்டும் வாங்கவும்.

மாற்றுவதற்கு முன் பழுதுபார்க்கவும்

    ஒரு பொருள் சரியாக வேலை செய்யாவிட்டால் அதனை முதலில் ழுதுபார்க்கவும். சரியாக வேலை செய்யவில்லை என்பதற்காக புதிய பொருளை வாங்க கூடாது.

விற்பனையாகிறது என்பதற்காக வாங்காதீர்கள்

    ஒரு பொருள் புதிதாக விற்பனைக்கு வந்திருப்பதற்காக மட்டுமே அதை வாங்க கூடாது. தேவை இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும்.

தானியங்கி கட்டண செலுத்துதல் அம்சத்தை பயன்படுத்தவும்

    மின்சார கட்டணம், மொபைல் போஸ்ட் பேயிட் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை தாமதக செலுத்துவதை தவிர்க்க UPI செயலிகளில் இருக்கும் தானியங்கி கட்டண செலுத்துதல் அம்சத்தை பயன்படுத்தவும்.

சுற்றுலா செல்வதற்கு முன் பட்ஜெட் போடவும்

    சுற்றுலா செல்வதற்கு முன் அதற்கான பட்ஜெட் போட்டுவிட்டு சேமிப்பதை ஆரம்பிக்கவும். எடுத்த எடுப்பில் முடிவு செய்து சுற்றுலா செல்ல வேண்டாம்.