உங்கள் முதுகில் ஏதோ புள்ளி புள்ளியா இருக்கா? அது எப்படி வருது தெரியுமா?


Alagar Raj AP
09-09-2024, 12:49 IST
www.herzindagi.com

முதுகு பரு

    முதுகில் புள்ளி புள்ளியாக இருப்பது முதுகு பரு அதாவது Back Acne அல்லது Bacne என்று அழைக்கப்படுகிறது. முதுகு பரு எதனால் ஏற்படுகிறது மற்றும் இதை எப்படி தடுக்கலாம் என்று இந்த பதிவில் காண்போம்.

    முதுகு மற்றும் தோள்பட்டை பகுதிகளில் இறந்த செல்கள் சரும துவாரங்களிள் குவிந்து துளைகளை அடைக்கும். இதனால் எண்ணெய் சரும துவாரங்கள் மேல் குவியும் போது முதுகில் பருக்கள் ஏற்படுகிறது.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு

    பொதுவாக மாதவிடாயின் போது அல்லது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் சருமத்தில் எண்ணெய் குவியலை அதிகரித்து முதுகு பருவை ஏற்படுத்துகிறது.

அதிகப்படியான வியர்வை

    உங்கள் முதுகில் வெளியேறும் வியர்வையை நீண்ட நேரம் சுத்தம் செய்யாமல் விட்டால் பாக்டீரியா தொற்றுக்கு வழிவகுத்து முதுகு பரு ஏற்படலாம்.

இறுக்கமான ஆடைகள்

    இறுக்கமான ஆடைகளை அணிவதால் வியர்வை சருமத்திலேயே தங்கி பாக்டீரியா தொற்றை ஏற்படுத்தும். இதனால் முதுகு வரும் சுலபமாக ஏற்படும்.

சுத்தம் செய்யுங்கள்

    அதிகப்படியான வியர்வை வெளியேறினால் உடனடியாக குளிக்கவும். முதுகை வியர்வை இல்லாமல் சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் வைத்திருந்தால் பரு உண்டாகாது.

தளர்வான ஆடைகள்

    இறுக்கமான மற்றும் சிந்தடிக் ஆடைகளை தவிர்த்து தளர்வான காற்றோட்டமான ஆடைகளை அணிவது வியர்வை உண்டாவதை குறைத்து முதுகு பரு ஏற்படும் வாய்ப்பை குறைக்கும்.