ஜெல் நெயில் பாலிஷ் பயன்படுத்தினால் இந்த பக்க விளைவுகள் ஏற்படலாம்!
Alagar Raj AP
17-09-2024, 12:58 IST
www.herzindagi.com
ஜெல் நெயில் பாலிஷ்
சாதாரண நெயில் பாலிஷை விட ஜெல் பாலிஷ் கூடுதல் பளபளப்பாகவும் அதிக நாட்கள் நீடிக்கும் என்பதால் இதை பலர் விரும்பி பயன்படுத்துகின்றனர். ஆனால் இதில் சில பக்க விளைவுகளும் ஏற்படும், அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தோல் எரிச்சல்
சாதாரண நெயில் பாலிஷை விட ஜெல் பாலிஷில் மெதக்ரிலேட்டுகள், அக்ரிலேட்டுகள் போன்ற இரசாயனங்கள் அதிகம் இருப்பதால் இது தோல் எரிச்சல் தோல் அழற்சி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
நிறமாற்றம்
ஜெல் நெயில் பாலிஷின் இரசாயனங்கள் மற்றும் புற ஊதாக் கதிர்களின் நீண்டகால வெளிப்பாட்டின் விளைவாக நகங்கள் மஞ்சள் அல்லது வெள்ளை புள்ளிகள் தோன்றலாம்.
நகங்கள் பலவீனமடையும்
ஜெல் நெயில் பாலிஷை அடிக்கடி பயன்படுத்துவதால் நகங்கள் பலவீனமடையும். இதனால் நகங்களில் உள்ள இயற்கையான எண்ணெய்கள் அகன்று, உலர்த்து நகங்கள் உடைவதற்கான வாய்ப்புள்ளது.
கல்லீரல் பாதிப்பு
ஜெல் நெயில் பாலிஷில் உள்ள டோலுயீன் என்ற இரசாயன கலவை கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகிறது.
தலைச்சுற்றல்
இவற்றில் உள்ள சைலீன் என்ற கரைப்பான் தலைச்சுற்றல் மற்றும் மயக்கம், கண் எரிச்சல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
புற்றுநோய்
ஜெல் நெயில் பாலிஷ்களில் உள்ள ஃபார்மால்டிஹைடு புற்றுநோயை உண்டாக்கும் பண்புகளை கொண்டுள்ளது என்று ஆய்வுகள் கூறுகிறது.