பால் போன்ற பளபளப்பான முகத்திற்கு ‘தக்காளி ஸ்க்ரப்’ இன்றே முயற்சிக்கலாம்!


Alagar Raj AP
21-09-2024, 14:00 IST
www.herzindagi.com

தக்காளி ஸ்க்ரப்

    முகத்தில் எந்தவிதமான பருக்கள், கரும்புள்ளிகள் இல்லாமல் தெளிவான பிரகாசமான சருமத்தை பெற 6 பயனுள்ள தக்காளி ஸ்க்ரப்கள் இதோ.

தக்காளி மற்றும் தேன்

    பாதியாக நறுக்கிய தக்காளியில் சிறிது தேனை ஊற்றி முகத்தில் 5 நிமிடம் தேய்க்கவும். இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் எண்ணெய் பசை நீங்கும்.

தக்காளி மற்றும் முல்தானி மெட்டி

    2 தேக்கரண்டி தக்காளி சாறுடன் 2 தேக்கரண்டி முல்தானி மிட்டியை கலந்து முகத்தில் ஸ்க்ரப் செய்யுங்கள். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால் முகப்பரு மறைந்து தெளிவான சருமத்தை பெறலாம்.

தக்காளி மற்றும் வாழைப்பழம்

    தக்காளி மற்றும் வாழைப்பழத்தை அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் மென்மையான சருமத்தை அளிக்கும்.

தக்காளி மற்றும் காபி தூள்

    ஒரு தேக்கரண்டி காபி தூளுடன் தக்காளி சாற்றை கலந்து முகத்தில் ஸ்க்ரப் செய்யுங்கள். இதனால் இறந்த சரும செல்கள் அகன்று, பளபளப்பான சருமத்தை பெறலாம்.

தக்காளி மற்றும் அரிசி மாவு

    தக்காளி சாற்றில் 2 ஸ்பூன் அரிசி மாவு மற்றும் அரை ஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து முகத்தில் 15 நிமிடம் ஸ்க்ரப் செய்யுங்கள். இது கரும்புள்ளிகளை மறைய செய்யும்.

தக்காளி மற்றும் கற்றாழை ஜெல்

    ஒரு தேக்கரண்டி தக்காளி சாற்றில் சில துளிகள் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் தேய்க்கலாம். கற்றாழையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சருமத்தில் வயதான அறிகுறிகளை குறைக்கும்.