கைகளின் அழகை மேம்படுத்த நகங்களை அழகு படுத்துகிறோம். ஆனால் நகங்களுக்கு அருகே உள்ள கருமையான தோலை யாரும் கண்டுகொள்வதில்லை. அதனால் நகங்களை சுற்றியுள்ள கருமையான தோலை பிரகாசமாக்குவதற்கு சில வீட்டு வைத்தியங்கள் இதோ.
மஞ்சள்
சிறிது மஞ்சள் தூளை தண்ணீரில் பேஸ்ட் பதத்திற்கு கலந்து நகங்களைச் சுற்றியுள்ள தோலில் தடவி மெதுவாக மசாஜ் செய்து தண்ணீரில் கழுவுங்கள். மஞ்சளின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் தோலின் நிறத்தை மேம்படுத்த உதவும்.
வெள்ளரிக்காய் சாறு
சிறிதளவு வெள்ளரிக்காய் சாறு மற்றும் எலுமிச்சை சாற்றை சம அளவில் காலத்து நகங்களைச் சுற்றியுள்ள தோலில் தடவுங்கள். அதன் பின் 30 நிமிடங்களுக்கு பிறகு விரல்களை கழுவுங்கள். இப்படி செய்வதால் நகங்களைச் சுற்றியுள்ள தோலின் கருமை நீங்கும்.
கற்றாழை ஜெல்
கருமையான சருமத்தை ஒளிரச் செய்ய கற்றாழை ஜெல் ஒரு நல்ல வழி. இதில் உள்ள வைட்டமின்கள் சி மற்றும் ஈ போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் கரும்புள்ளிகள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷனைக் குறைக்க உதவும்.
தக்காளி
தக்காளியில் வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்துள்ளன, இது உங்கள் சருமத்தை இயற்கையாகவே பிரகாசமாக்க உதவும். அதற்கு தக்காளியை பாதியாக வெட்டி நகங்களை சுற்றி தேய்க்கவும்.
தயிர்
தயிரில் காணப்படும் லாக்டிக் அமிலம் இறந்த செல்களை நீக்கி சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும். இதற்கு நகங்களை சுற்றி தயிரை தடவி, 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவுங்கள். இப்படி தினமும் செய்வதால் நகங்களை சுற்றியுள்ள தோலின் நிறம் மேம்படும்.
உருளைக்கிழங்கு சாறு
உருளைக்கிழங்கு சாற்றில் உள்ள அசெலிக் அமிலம் சருமத்தை இயற்கையாகவே ஒளிரச் செய்யும். இதற்கு உருளைக்கிழங்கு சாற்றை விரல்களில் தடவவும். அதன் பின் 20 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரில் கழுவவும்.