உங்கள் முகத்தில் இந்த பகுதிகளில் முகப்பரு வர இதுதான் காரணம்


Alagar Raj AP
24-07-2024, 15:00 IST
www.herzindagi.com

    முகத்தில் பருக்கள் வர நாம் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்கள், வாழ்க்கை முறை, காலநிலை போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அப்படி முகத்தில் குறிப்பிட்ட பகுதியில் முகப்பரு ஏற்பட என்ன காரணம் என்பதை ஆராயலாம்.

நெற்றி

    நெற்றியில் முகப்பரு வருவது மோசமான உணவு பழக்கம், முறையற்ற செரிமானம், குடல் நோயறிகுறி போன்ற காரணங்களாக இருக்கலாம்.

கன்னங்கள்

    அழுக்கு தலையணை உறையில் படுப்பது, மோசமான காற்று மாசுபாடு உள்ள இடத்தில் வாழ்வது, அசுத்தமான மேக்கப் துரிகைகளை பயன்படுத்துவதால் கன்னத்தில் முகப்பரு உண்டாகும்.

புருவங்கள்

    போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, முடி பராமரிப்பு பொருட்கள், மேக்கப் பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமையால் புருவங்களில் முகப்பரு ஏற்படும்.

மூக்கு

    மூக்கில் சருமத்துளைகள் அதிகமாக சுரக்கும் போது, ​​இறந்த சருமம், பாக்டீரியா போன்ற காரணங்களால் மூக்கில் முகப்பரு வரும். மேலும் மன அழுத்தம் காரணமாகவும் மூக்கில் பருக்கள் வரலாம் என்று கூறப்படுகிறது.

காதுகள்

    உடலின் மற்ற பாகங்களில் உள்ள தோலைப் போலவே காதுகளில் உள்ள சருமத்திலும் துளைகள் உள்ளன. இவற்றில் எண்ணெய்கள், வியர்வை மற்றும் இறந்த சரும செல்கள் தேங்குவதால் காதில் முகப்பரு ஏற்படும். அல்லது முடி பராமரிப்பு பொருட்களின் ஒவ்வாமை காரணமாகவும் காதில் முகப்பரு ஏற்படும்.

தாடை

    ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக தாடை பகுதியில் முகப்பரு ஏற்படும். ஹார்மோன் சமநிலையின்மை இல்லையென்றால் அதிகப்படியான எண்ணெய் சுரப்பிகள் காரணமாகவும் தாடையில் முகப்பரு ஏற்படும்.