சருமத்தை அழகாக்கும் மாதுளை பேஸ் பேக்!


Jansi Malashree V
09-03-2024, 20:42 IST
www.herzindagi.com

    மாதுளைப் பழங்களைச் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, முகத்தை அழகாக்குவதற்கும் இன்றைக்கு மக்கள் அதிகளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

சரும பராமரிப்பில் மாதுளை

    மாதுளையில் வைட்டமின் சி, ஆன்டி- ஆக்ஸிடன்டகள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் ஏற்படும் பாக்டீரிய தொற்றுகளை அகற்ற உதவுகிறது.

ஒளிரும் சருமம்

    மாதுளை பழம் சருமத்திற்கு நீரேற்றம் அளிப்பதோடு, ஒளிரும் சருமத்தை பெற உதவுவதால் பேஸ் மாஸ்க் போன்று இதைப் பயன்படுத்தலாம்.

மாதுளை மற்றும் எலுமிச்சை

    மாதுளை விதைகளை பேஸ்ட் போன்று அரைத்துக் கொண்டு அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலக்கவும். பின்னர் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 30 நிமிடங்களுக்கு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். இது முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்க உதவியாக உள்ளது.

மாதுளை மற்றும் தயிர்

    சரும பராமரிப்பிற்கு மாதுளை மற்றும் தயிர் சிறந்த தேர்வாக அமையும்.மாதுளை மற்றும் தயிரை மிக்ஸியில் பேஸ்ட் போன்று அரைத்துக் கொண்டு முகத்தில் தடவவும். வாரத்திற்கு இருமுறை இவ்வாறு பயன்படுத்தும் போது முகம் எப்போதும் பளபளப்புடன் இருக்க உதவியாக இருக்கும்.

மாதுளை மற்றும் தேன்

    மாதுளை மற்றும் தேன் இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொண்டு பேஸ் பேக் போன்று வாரத்திற்கு இருமுறை பயன்படுத்தவும். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமத்தை எப்போதும் பிரகாசமாக வைத்திருப்பதோடு முகப்பரு வராமல் தடுக்கிறது.

    இதுபோன்ற முறைகளில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி முகத்தை எப்போதும் பளபளப்பாக வைத்திருக்க முயற்சி செய்யவும்.