குதிகால் வெடிப்பு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண இதை பண்ணுங்க


Raja Balaji
03-06-2025, 09:10 IST
www.herzindagi.com

    குதிகால் வெடிப்பு பிரச்னைக்கு தீர்வு காராணம் கிரீம் ஒன்றை தயாரித்து பயன்படுத்துவது எப்படி என பார்க்கலாம்.

பாதாம் கிரீம்

    இதை செய்வதற்கு 20 பாதாம், குங்குமப்பூ, கற்றாலை ஜெல், ரோஸ் வாட்டர், வைட்டமின் ஈ கேப்ஸ்யூல், பாதாம் எண்ணெய் தேவைப்படும்.

    இரவு முழுக்க பாதாமை ஊறவைத்து காலையில் தோல் நீக்கவும். சிறிய பாத்திரத்தில் ரோஸ் வாட்டர் மற்றும் குங்குமப்பூ கலக்கவும்.

    மிக்ஸியில் தோல் நீக்கிய பாதாம், குங்குமப்பூ - ரோஸ் வாட்டர் கலவையை அரைக்கவும்.

    இதை வடிகட்டி வைட்டமின் ஈ, பாதாம் எண்ணெய், கற்றாலை ஹெல் சேர்த்து கலக்கவும்,

    இந்த பாதாம் கிரீமை கால்களில் பயன்படுத்தி மசாஜ் செய்யவும். ஒரு வாரத்திலயே பலன் பெறுவீர்கள்.