உங்கள் தோல் வகைக்கு எந்த சீரம் பயன்படுத்தலாம்..? இங்கே தெரிஞ்சுக்கோங்க!
Alagar Raj AP
11-06-2024, 14:50 IST
www.herzindagi.com
வகைவகையான சீரம்களை வாங்கி பயன்படுத்தியும் உங்கள் சருமத்தில் எந்த மாற்றமும் ஏற்படலையா? அப்போ நீங்கள் உங்கள் சருமத்திற்கு பொருந்தாதா சீரத்தை பயன்படுத்தீர்கள் என்று அர்த்தம். இந்த பதிவில் உங்களுக்கு தோல் வகைக்கு பொருந்தும் சீரம்களை தெரிந்து கொள்வோம்.
உணர்திறன் வாய்ந்த சருமம்
உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் ஷியா வெண்ணெய், கிளிசரின், அலோ வேரா மற்றும் ஜிங்க் சீரம்களை பயன்படுத்தலாம். இவை உங்கள் சருமத்தில் தோல் எரிச்சலைத் தடுக்கும்.
வறண்ட சருமம்
ஹைலூரோனிக் அமிலம், வைட்டமின் சி சீரம்களை உலர்ந்த சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தலாம். இவை உங்களுக்கு சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து புத்துணர்ச்சியாக வைக்கும்.
வயதான சருமம்
வைட்டமின் சி, மாண்டோலின் அமிலம், ஹைலூரோனிக் அமிலம் மற்றும் நியாசினமைடு போன்ற சீரம்களை இந்த வகையான சருமத்திற்கு பயன்படுத்தலாம். இவை உங்கள் சருமத்தை முன்கூட்டிய வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் தோல் நிறத்தை மேம்படுத்துகிறது.
எண்ணெய் சருமம்
எண்ணெய் பிசுக்கு சருமம் உள்ளவர்கள் சாலிசிலிக் அமிலம், நியாசினமைடு மற்றும் துத்தநாகம் ஆகியவற்றைக் கொண்ட சீரம்களைத் தேர்ந்தெடுங்கள். இவை சருமத்தில் இருக்கும் எண்ணெய் மற்றும் துளைகளை அகற்றும்.
முகப்பரு உள்ள சருமம்
தேயிலை மர எண்ணெய் மற்றும் சாலிசிலிக் அமிலம் உள்ள சீரம்களை முகப்பரு உள்ளவர்கள் பயன்படுத்தலாம். இவை ஏற்கனவே உள்ள முகப்பரு மற்றும் வீக்கத்தை குணப்படுத்தவும் எதிர்காலத்தில் முகப்பரு வராமல் தடுக்கவும் உதவும்.
மந்தமான சருமம்
பொலிவிழந்து காணப்படும் மந்தமான சருமத்திற்கு கிளைகோலிக் அமிலம் அல்லது லாக்டிக் அமிலம் சீரம்களை பயன்படுத்துங்கள். இவை இறந்த சரும செல்களை அகற்றவும், புதிய செல் வளரவும் ஊக்குவிக்கும்.